ஜியோவின் வெல்கம் ஆஃபர் 2-க்கு ஆசைப்படுபவரா நீங்கள்.? அய்யோ பாவம்.!

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பாகத்தை குறிவைத்து நீங்கள் ஜியோ சேவைக்கு மாற திட்டமிட்டால் கொஞ்சம் நிதானம் தேவை.

|

டிசம்பர் 31-ஆம் தேதியோடு அதாவது விரைவில் ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற வெல்கம் ஆஃபர் முடிவுக்கு வரவுள்ளது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் அதன் வரம்பற்ற சேவைகள் வெல்கம் ஆஃபர்-2 என்ற புதிய சலுகையின் கீழ் நீடிக்கலாம் என்ற மற்றும் அது மார்ச் 2017 வரை செல்லுபடியாகும் என்ற வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

நிஜமாகவே ரிலையன்ஸ் ஜியோ அதன் வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பாகத்தை அறிமுகம் செய்யுமா அல்லது என்பது உண்மையிலே ஒரு பெரிய குழப்பம் தான். எனினும், தொலை தொடர்பு ஆப்ரேட்டர் சலுகை நீட்டிப்பு சார்ந்த எந்த விதமான தகவலையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பாகத்தை குறிவைத்து நீங்கள் ஜியோ சேவைக்கு போர்ட் செய்து மாற திட்டமிட்டுருந்தால் அதற்கு முன்பு இந்த தொகுப்பை ஒரு முறை முழுமையாக படித்து முடித்துவிட்டு மாறலாமா.? வேண்டாமா..? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

கட்டுக்கதை

கட்டுக்கதை

"ஆஹா.. ஜியோவின் முதல் அறிமுக சலுகையைத்தான் தவற விட்டாச்சு, இரண்டாவது சலுகையை விட்டுவிடக் கூடாது" என்ற ஆர்வத்தில் ஜியோவிற்கு போர்ட் செய்யும் எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். ஏனெனில், வெல்கம் ஆஃபர் 2 மற்றும் வரம்பற்ற திட்டம் நீட்டிப்பு அறிமுகம் பற்றி எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வரவில்லை. இதுவொரு யாகக் கூட இருக்கலாம்.

உதவாத விடயம்

உதவாத விடயம்

ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அதன் 4ஜி கட்டண திட்டங்களை அறிவித்து விட்ட நிலையில், ஜியோ மீண்டும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வெல்கம் சலுகை வழங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடப்பது உதவாத விடயமாகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மறைமுகம்

மறைமுகம்

ஒரு சில நாட்களுக்கு முன்பு எவ்லியான ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு அறிக்கை ஒன்றில், டிசம்பர் மத்தியில் தங்கள் வலையமைப்பு இணைப்பு மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் வரம்பற்ற வெல்கம் ஆஃபர் நீடிக்கப்படமாட்டாது என்பதை அது மறைமுகமாக மேற்கோள் காட்டுகிறது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

தொலை தொடர்பு ஆப்ரேட்டர் அவர்களது வாடிக்கையாளர்களிடம் அவர்களின் 4ஜி ஆதரவு கருவிகளில் 4ஜி ஸ்பீட் டெஸ்ட் நிகழ்த்தி பார்க்குமாறு கேட்டுக் கொண்டது. முயற்சி செய்து பார்த்த கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் இணைய இணைப்பில் நல்ல முன்னேற்றம் உள்ளதை கண்கூடாக பார்க்க முடிவதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் வியாபாரத்தில் தான் குதிக்குமே தவிர இலவச சலுகைகளை வழங்க வாய்ப்பில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிச்சயமாக நல்லதல்ல

நிச்சயமாக நல்லதல்ல

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அதன் எதிர்கால திட்டங்களை விரைவில் அறிவிக்கும் என்கின்றன, வெளியான வதந்திகள். சரி, வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பாகம் வெளியாகி சலுகைகள் நீட்டிகப்பட்டால் மகிழ்ச்சி தான். ஆனால், அது அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தானே ஒழிய வருமா..? வராதா.? கிடைக்குமா..? கிடைக்காதா..? என்ற குழப்பத்தில் ஒரு முடிவுக்கு வருதல் நிச்சயமாக நல்லதல்ல.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ டிடிஎச் விரைவில்.. கையில் ரூ.185/-யை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Porting to Reliance Jio Right Now to Avail Welcome Offer 2 is the Worst Decision. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X