Home
News

வெயிலில் இருந்து தப்பிக்க ரூ.450 விலையில் போர்ட்டபிள் Fan! இனி AC, கூலிங் பேன்லாம் வேண்டாம்!

கோடை காலம் துவங்கிவிட்டது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை ஸ்கேல்கள் இப்போதே தொட்டுவிட்டன. இனி அக்னி நட்சத்திரம் ஆரம்பமானால், சூரியனின் வெப்பத்திலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்பதே சந்தேகமாகவுள்ளது.

வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க AC, ஏர் கூலர், கூலிங் ஃபேன், டவர் ஃபேன் என்று பல சாதனங்கள் இருந்தாலும், எல்லோரும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, இந்த சாதனங்களின் உதவி இல்லாமல் வெறுமென தான் செல்ல வேண்டும். வெளியில் சென்றாலும், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியானால், உங்களிடம் இந்த போர்ட்டபிள் கூலிங் ஃபேன் இருப்பது அவசியம்.

வெயிலில் இருந்து தப்பிக்க ரூ.450 விலையில் போர்ட்டபிள் Fan!

மற்ற சாதனங்களைப் போல நீங்கள் இதற்காகப் பல ஆயிரங்களைச் செலவிட வேண்டியதில்லை. இதற்காக நீங்கள் வெறும் சில 100 ரூபாய்களைச் செலவு செய்தால் போதும். இத்தகைய சாதனம் உங்களிடம் இருந்தால், வெயில் காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கச் சிறிய மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஃபேன்களை கைவசம் வைத்துக்கொள்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

DP 7631 ரீசார்ஜ் செய்யக்கூடிய காம்பாக்ட் USB ஃபேன் (DP 7631 Rechargeable Compact USB Fan) என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நீங்கள் இப்போதே வாங்குவது சிறந்தது. இந்த ஃபேன் உள்ளே இருக்கும் 2000mAh லித்தியம் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனால், உங்களுக்குத் தேவைப்படும் வரை இது தொடர்ந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 90மிமீ சைலண்ட் ஆபரேஷன் மற்றும் 5 பிளேட் டேபிள் ஃபேன் அம்சங்களை இது கொண்டுள்ளது.

இந்த போர்ட்டபிள் ரீசார்ஜ் ஃபேன் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் தென்றலை சில்லென்று வழங்குகிறது. உங்களுக்கு வசதியாகவும் இடையூறு இல்லாமல் இருக்கும் படி இது சத்தமில்லாமல் சிறப்பாக இயங்குகிறது. Flipkart தளத்தில் இந்த ஃபேன் மீது தற்போது 54% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஃபேனை வாங்குவதற்கான மிகச் சிறந்த தருணம் இதுவாக மட்டுமே இருக்க முடியும் மக்களே.DP 7631 ரிச்சார்ஜபிள் போர்ட்டபிள் USB ஃபேன் மூலம் வெப்பத்தின் பிடியிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

வெயிலில் இருந்து தப்பிக்க ரூ.450 விலையில் போர்ட்டபிள் Fan!

நாங்கள் முன்பே சொன்னது போல, இந்த போர்ட்டபிள் யுஎஸ்பி ஃபேன் சாதனம் 2000mAh கொண்ட லித்தியம் பேட்டரி உடன் சக்தியூட்டப்படுகிறது. இந்த சாதனம் ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இதன் தரத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. DP 7631 USB ரிச்சார்ஜபிள் டேபிள் ஃபேன் ஒரு பிரஷ்லெஸ் மோட்டாரைக் கொண்டுள்ளது. இது 25W வரை சக்தியுடன் நன்றாக வேலை செய்யும்.

இது 700 RPM வேகத்தில் ஒரு குட்டி சூறாவளி போல உங்கள் கைக்கு அடக்கமாக இருந்துகொண்டே, சில்லென்ற காற்றை வழங்குகிறது. உங்கள் தனிப்பட்ட பகுதிக்கு நிறையக் காற்று வர வைப்பதில் இந்த சாதனம் சிறப்பாக இயங்குகிறது. இந்த டேபிள் ஃபேன் உயர்தர ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் வலுவான உடலைக் கொண்டுள்ளது. எனவே இது நீண்ட ஆயுளை கொண்டுள்ளது. இந்த சாதனம் இப்போது சிறந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

Flipkart தற்போது DP 7631 போர்ட்டபிள் டேபிள் ஃபேனின் மீது 54% விலை குறைப்பை வழங்குகிறது. இதன் விலை ரூ.999-ல் இருந்து இப்போது வெறும் ரூ.459 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உயர்தர போர்ட்டபிள் டேபிள் ஃபேனுக்கான டீலைத் தேடிக்கொண்டிருந்தால், இதோ உங்களுக்கான வாய்ப்பு. Flipkart இன் இந்த நம்பமுடியாத விற்பனை விலையை பெற உடனே ஷாப்பிங் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portable rechargeable fan at a price of Rs 450 to escape from the summer heat no need of AC and cooling fan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X