Home
News

இழுத்து மூடப்பட்ட கதவுகள் : ஆழ்ந்த இரங்கல்கள்!

By Meganathan

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டெம் வௌலின் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கபாலி வெளியீட்டிற்கு முந்தைய நாள் போலாந்து நாட்டில் கைது செய்யப்படுகின்றார். இவர் கிக்ஆஸ் டொரன்ட்ஸ் எனப்படும் இணையதளத்தின் நிறுவனர் ஆவார்.

இழுத்து மூடப்பட்ட கதவுகள் : ஆழ்ந்த இரங்கல்கள்!

இவர் நடத்தி வந்த கிக்ஆஸ் டொரன்ட்ஸ் தளத்தில் 100 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சட்ட விரோதமாகத் திருடப்பட்ட திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது.

உலக பிரபலமான கிக்ஆஸ் டொரன்ட்ஸ் தளம் ஆர்டெம் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் முடக்கப்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு டொரன்ட்ஸ் தளமும் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது.

டொரன்ட்ஸ்

டொரன்ட்ஸ்

கிக்ஆஸ் டொரன்ட்ஸ் முடக்கப்பட்டாலும் சீராக இயங்கி வந்த டொரன்ட்ஸ்.இயு (Torrentz.eu) தளம் திடீரென தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது.

சேவை

சேவை

2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டொரன்ட்ஸ்.இயு தளமானது உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளமாக மிக வேகமாக வளர்ந்து வந்தது.

செய்தி

செய்தி

13 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை வழங்கிய டொரன்ட்ஸ் திடீரென தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது என நெக்ஸ்ட் வெப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதளம்

இணையதளம்

ரொடன்ட்ஸ்.இயு தளத்தின் முகப்பு பக்கம் தொடர்ந்து வேலை செய்தாலும் மற்ற பக்கங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இத்தளம் தனது சேவையை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலவசம்

இலவசம்

டொரன்ட்ஸ் தளம் பல்வேறு தேடுபொறிகளில் இருந்து தகவல்களை வழங்கியதோடு மிகவும் வேகமாகவும், தரவுகளை இலவசமாகவும் வழங்கும் தளமாக விளங்கியது. இன்று டொரன்ட்ஸ் தளத்தை திறக்கும் போது "Torrentz will always love you. Farewell" என்ற தகவல் திரையில் காணப்படுகின்றது.

பயனர்கள்

பயனர்கள்

டொரன்ட்ஸ் தளத்தின் பயனர்களும் தங்களது பதிவு குறியீடு மூலம் சைன் இன் செய்ய இயலவில்லை, மாறாக அவர்களுக்கும் "Torrentz will always love you. Farewell" தகவல் மட்டுமே கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Popular torrent site ‘Torrentz’ shuts down as sudden Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X