OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.! தழிழ் ராக்கர்ஸ்.!
தழிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் என்று மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்கள் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரீலிஸான முதல் நாளே தழிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில்ரீலிஸ் செய்திருக்கிறது. குறிப்பாக அமேஸான ப்ரைம-ல் வெளியானது போலவே ஹெச்.டி. தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் கடந்த மே 29-ம் தேதி வெளியான படம் பொன்மகள் வந்தாள். அதன்படி நேரடியாக ஓடிடி
தளத்தில்(அமேசான் ப்ரைம்) வெளியான முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக முக்கிய பிரமுகர்களுக்கு இந்தப் படத்தின் பரிமியர் ஷோ நேற்று காண்பிக்கப்பட்டது, படத்தைப் பற்றி பலரும் பாசிட்டிவாக ரிவ்வியூ கொடுத்தனர். நடிகர் சூர்யா,ஒரு தயாரிப்பாளராகவும் பார்வையாளராகவும் தனக்கு படம் திருப்தி தந்திருப்பதாகக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமேசான் ப்ரைம்-ல் படம் வெளியாகி சில மணி நேரங்களில் ஹெச்.டி. தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது. இதனால் படத் தயாரிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அமேஸான் பிரைம் நிறுவனம் இது தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ்
மீது சட்ட நடவடிக்கை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த தமில் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான், இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவ்வப்போது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு இதேபோல புதுப்படங்களை ரிலீஸ் அன்றே இணையதளத்தில் வெளியிடுகிறது தழிழ் ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்ஸ்-ல் வரும்புதிய தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலதிரைப்படங்களும் வெளியாகின்றன. திரையங்களில் வெளியாகும் நாட்களிலோ அல்லது அதற்கு முன்போ ஹெச்டி தரத்திலும் வெளியாகி திரைப்பட தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றன. இதனால் இந்த படங்கள் போதியநாட்கள் கூட ஓடாமல் நஷ்டத்தில் போய் முடிந்து விடுவதும் உண்டு.

இதனால் ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களும், நஷ்டத்தை தவிர்க்கவும், தனிப்பட்ட லாபம் கிடைக்கவும் தனியார்வலைதளங்களுக்கு படங்களை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றது.

பல்வேறு பெயர்களில் தமிழ்ராக்கர்ஸ் உதயமாகிக் கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது.


Click it and Unblock the Notifications