அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல்! Flipkart-ல் திடீர் SALE.. அடுத்த 3 நாட்களுக்கு Phone, Laptop மீது ஆபர் மழை!

|

பொங்கல் (Pongal) வரை காத்திருக்க முடியாது என்கிற பாணியில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஒரு திடீர் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கி, எப்போது முடியும்? இதன் கீழ் என்னென்ன சலுகைகள் அணுக கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

மொத்தம் 3 நாட்கள்!

மொத்தம் 3 நாட்கள்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம், பிக் பச்சட் தமால் சேல் 2023 (Big Bachat Dhamaal Sale 2023) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இது ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையிலாக மொத்தம் 3 நாட்கள் நடக்கும்.

இந்த சிறப்பு விற்பனையின் போது - ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டிவிகள், அக்ஸசெரீஸ், லேப்டாப்கள், வீட்டு உபகரண பொருட்கள் என கிட்டத்தட்ட எல்லா வகையான பொருட்கள் மீதும் தள்ளுபடிகள் வழங்கப்படும். போதாக்குறைக்கு - குறிப்பிட்ட பொருட்களுக்கு - வங்கிச் சலுகைகளும் அணுக கிடைக்கும்.

அலெர்ட்! உங்க போனை 300-வது முறை சார்ஜ் செய்யும் போது.. வல்லுநர்கள் சொல்லும் ஷாக்கிங் தகவல்!அலெர்ட்! உங்க போனை 300-வது முறை சார்ஜ் செய்யும் போது.. வல்லுநர்கள் சொல்லும் ஷாக்கிங் தகவல்!

ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 3 முக்கிய ஆபர்கள்!

ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 3 முக்கிய ஆபர்கள்!

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையின் போது, ஒவ்வொரு நாளும் 3 முக்கியமான ஆபர்கள் அணுக கிடைக்கு மற்றும் அது பல்வேறு காலக்கெடுவின் கீழ் அணுக கிடைக்கும்.

அதாவது நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணி என ஒவ்வொரு காலக்கெடுவின் போதும், மூன்று வெவ்வேறு வகையான சலுகைகள் அணுக கிடைக்கும்

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்..!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்..!

01. தமால் டீல்ஸ் : நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு அணுக கிடைக்கும். இந்த தமால் டீல்ஸின் கீழ் பல வகையான தயாரிப்புகளை சலுகை விலையின் கீழ் வாங்கலாம்.

எடுத்துக்காட்டிற்கு - மெத்தைகள், டைனிங் செட்கள், நாற்காலிகள், அலமாரிகள், குழந்தைகளுக்கான டி-ஷர்ட்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் பல பொருட்களை வாங்க தமால் டீல்ஸ் ஒரு சிறந்த நேரம் ஆகும்!

01. லூட் பஜார்: இது ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும். இந்த ஆபரின் கீழ், பல வகையான தயாரிப்புகள் ஆனது கற்பனை செய்து பார்க்க முடியாத விலைகளின் கீழ் வாங்க கிடைக்கும்.

03. காம்போ டீல்ஸ்: இது நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு அணுக கிடைக்கும், இதன் கீழ் பல வகையான பொருட்களை கொண்ட தொகுப்பை சலுகை விலையின் கீழ் வாங்க முடியும்!

எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!

மொபைல்கள் மீதான ஆபர்களை பொறுத்தவரை?

மொபைல்கள் மீதான ஆபர்களை பொறுத்தவரை?

பிளிப்கார்ட் நடத்தும் இந்த Big Bachat Dhamal விற்பனையின் போது ரியல்மி (Realme), ஆப்பிள் (Apple), போக்கோ (Poco), சாம்சங் (Samsung), எம்ஐ (Mi), இன்பினிக்ஸ் (Infinix), மோட்டோரோலா (Motorola) போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கும்.

குறிப்பாக லேட்டஸ்ட் ஆக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எப்04 (Samsung Galaxy F04), போக்கோ சி50 (POCO C50), இன்பினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20), ரெட்மி நோட் 12 சீரீஸ் (Redmi Note 12 series) போன்ற ஸ்மார்ட்போன்கள், இந்த ஸ்பெஷல் சேலின் போது விற்பனைக்கு வரலாம்; சலுகைகளை கூட பெறலாம்!

எந்தெந்த லேப்டாப்கள் மீது ஆபர்கள் இருக்கும்!?

எந்தெந்த லேப்டாப்கள் மீது ஆபர்கள் இருக்கும்!?

பிளிப்கார்ட்டின் பிக் பச்சட் தமால் விற்பனையின் கீழ், லேப்டாப்கள் மீது 40% வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபரின் கீழ் எச்பி (HP), ஆசஸ் (Asus), டெல் (Dell), இன்பினிக்ஸ் (Infinix), ஏசர் (Acer), ரெட்மி (Redmi) மற்றும் பல முக்கிய பிராண்டுகளின் லேப்டாப்களின் மீது சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pongal Offers On Mobile Laptop Flipkart Big Bachat Dhamaal Sale From January 6 to January 8 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X