Home
News

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: வங்கி கணக்கு முக்கியம்: பணிகள் தீவிரம்.!

தமிழக மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆதார் எண்ணை தங்களது வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பொங்கல் பரிசு நேரடியாக ரூ.1000 வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்துக் கடந்த 19-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் எண்

அதேபோல் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்குப் பதில் ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

ஆனாலும் தற்போது ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்பு கணக்குகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமென்று மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அண்மையில் தெரிவித்தார்.

ரூ.1000 பரிசு தொகை

ரூ.1000 பரிசு தொகை

மேலும் இதற்காக நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் பொங்கல் பண்டிகையின்போது பயனாளிகளுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெளிவாகத் தெரிகிறது.

குளறுபடிகள் ஏற்பட்டது

குளறுபடிகள் ஏற்பட்டது

அதேபோல் கடந்த தைப்பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. எனவே இந்த குளறுபடிகளைத் தவிர்க்கத் தான் தமிழக அரசு வரும் தைப்பொங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணமாக வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 ரூ.1000 சென்றடைவது உறுதி

குறிப்பாக வங்கிக் கணகுக்குளில் வரவு வைக்கப்படுவதால் பயனாளிக்குச் சரியான முறையில் ரூ.1000 சென்றடைவது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ பேலன்ஸ் கணக்கு

ஜீரோ பேலன்ஸ் கணக்கு

மேலும் ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தால், அதன் விவரங்களைப் பெறுவதற்கும், இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) துவங்குவதற்கும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Pongal gift of Rs.1000 may be deposited directly into the bank account of Tamilnadu ration card holders Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X