புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

|

மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன், ஆஃப்லைன் மூலம் தேர்வு எழுதலாம் எனவும் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகம், குறிப்பேடுகள் உள்ளிட்டவற்றை பார்த்து எழுதலாம் எனவும் புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பள்ளி கல்லூரிகள் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

தேர்வுகள் ரத்து

தேர்வுகள் ரத்து

ஆன்லைன் வகுப்புகள் எதிர்ப்புகள் கிழம்பின. இருப்பினும் சில பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தன. தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில் தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து

அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து

தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டு வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார். தேர்வுக்கு தயாராகி, விண்ணப்பக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்தார்.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்

இந்த நிலையில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என புதுகை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மாணவர்களிடையே பேசு பொருளாக மாறி வருகிறது.

ரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!ரயில் கழிவறையில் மாணவியின் அலறல் சத்தம்: ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!

புதுகை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாடு

புதுகை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாடு

இதுகுறித்து புதுகை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பை குறித்தை பார்க்கலாம். புதுகை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் என மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைகளின்படி இறுதி ஆண்டு தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் புத்தகம், குறிப்பேடுகள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று பார்த்து எழுத அனுமதி அளிக்கப்படுகிறது.

புத்தகத்தை பரிமாற்றக் கூடாது

புத்தகத்தை பரிமாற்றக் கூடாது

இப்படி செய்வதன்மூலம் கேள்விகளுக்கான பதில்களை மாணாக்கள் புரிந்து பதில் அளிக்க வழிவகுக்கும். அதேபோல் கொரோனா பரவல் காரணமாக மாணாக்கள் தங்களது புத்தகம் உள்ளிட்டவற்றை பிறருடன் பரிமாறாமல் இருக்க வேண்டும் இதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள்.

ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்

ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்

தேர்வு எழுதும் மாணவர்கள் ஏ4 வினாத்தாளில் கருப்பு மை கொண்டு எழுத வேண்டும். தேர்வு எழுதி முடித்தவுடன் எழுதிய அனைத்து பக்கங்களையும் 30 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு எழுதும் நேரம், வினாத்தாள் முறை அனைத்தும் முன்பிருந்த முறையே பின்பற்றப்படும்.

முதல்தாளில் எழுத வேண்டிய வழிமுறைகள்

முதல்தாளில் எழுத வேண்டிய வழிமுறைகள்

அதேபோல் முதல்தாளில் பெயர், தேர்வு பதிவு எண், பாடம், படிக்கும் பிரிவு, தேதி உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். இரண்டாம் பக்கத்தில் இருந்தே விடைகளை எழுத வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pondicherry University Announced to Students Can Write Exams With Book

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X