தண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.!

|

டெல்லி உள்ளிட் சில முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது என செய்திகள் வருவது அனைவரும் பார்த்திருப்போம். உண்மையில் டெல்லி போன்ற பகுதிளில் காசு மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது என வல்லுநர்கள்
கூறியுள்ளனர்.

ஆக்ஸிஜன் விற்பனை நிலையம்

ஆக்ஸிஜன் விற்பனை நிலையம்

இதன் எதிரொலியாக டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது, இதில் நாம் சுத்தமான ஆக்ஸிஜனை பெற பணம் செலுத்த வேண்டும். இதுவரை தண்ணீரை தான் காசு கொடுத்துவாங்கி வந்தோம் இந்நிலையில சுத்தமான ஆக்ஸிஜனை பெறவும் பணம் கொடுக்க துவங்கிவிட்டோம்.

ஆக்சி ப்யூர்

ஆக்சி ப்யூர்

காற்று பிறகாலத்தில் காசு கொடுத்து வாங்க நேரிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தற்காலத்திலேயே விற்பனைக்குவந்துவிட்டது. அதன்படி ஆக்சி ப்யூர் என்ற பெயரிலான இந்த விற்பனை மையம் டெல்லியில் செயல்படதுவங்கியுள்ளது.

வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்புவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு

இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த மையத்தில் ட்யூப் வழியே பல்வேறு நறுமணங்களில் உள்ள காற்றை சுவாசித்துக் கொள்ளலாம், இதற்கு அங்கேஇருக்கும் இருக்கையில் அமர்ந்து ஆக்ஸிஜனை சுவாசிக்க அலங்கரிக்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 15நிமிடங்கள்

குறிப்பாக 15நிமிடங்கள் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது. அதிலும் ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயாராக இருக்கும் ஆக்ஸிஜனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

 OXY99  ஆக்சிஜன்

பின்பு இந்த OXY99 ஆக்சிஜன் கேன்கள் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது எனத் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் சுத்தமான ஆக்ஸிஜன் விலை சற்று அதிகமான உள்ளது என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.

பொழுதுபோக்கு

பல நாடுகளில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும், நறுமண சிகிச்சைக்காகவும் சுத்தமான ஆக்ஸிஜனை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Pollution in Delhi: Oxygen Bars Opens in Delhi at Rs. 299: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X