கூகுள்-பேஸ்புக் தளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53கோடி செலவு.! பாஜக முதலிடம்.!
பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி 4கோடியே 23 லட்சம் ரூபாய் செலவிட்டு முதல் இடத்தில் உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டு கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இந்திய அரசியல் கட்சிகள் சுமார் 53கோடி ரூபாய்க்கு விளம்பரங்களை செய்துள்ளன. மேலும் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

வரும் 23-ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின, குறிப்பாக இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள்
முக்கிய பங்காற்றின என்று தான் கூறவேண்டும்.

போலி செய்திகள்
குறிப்பாக போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன, ஆனால் அதையும் மீறி பல செய்திகள் பரப்பப்பட்டன என்று
தான் கூறவேண்டும்.

53கோடி
கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் முடிவடைந்த மே மாதம் வரை கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற பல்வேறு இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களை செய்துள்ளன. குறிப்பாக பேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் 53கோடி ரூபாய்க்கு விளம்பரங்களை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி:
பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி 4கோடியே 23 லட்சம் ரூபாய் செலவிட்டு முதல்
இடத்தில் உள்ளது.
பின்பு கூகுளில் 17கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்களை செய்துள்ளது.

காங்கிரஸ்:
பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்வதற்காக காங்கிரஸ் 46லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. அதேபோல் கூகுளில் விளம்பரங்கள் செய்வதற்காக 2 கோடியே 71லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது.

திரணாமுல் காங்கிரஸ் கட்சி- ஆம் ஆத்மி கட்சி:
பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்வதற்காக திரணாமுல் காங்கிரஸ் கட்சி 29.28லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி 13.62லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. பின்பு 2.18கோடி செலவில் கூகுளில் விளம்பரம் செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.


Click it and Unblock the Notifications