டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் செய்திகளுக்கான விதிமுறைகள் விரைவில் வரும்: ஸ்மிரிதி இராணி

கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு, நமோ மொபைல் அப்ளிகேஷன் மூலம் சேகரிக்கப்படும்.

|

புதுடெல்லி: ஏற்கனவே ஒளிபரப்பு மற்றும் அச்சு ஊடகத்திற்கு இருப்பது போல, டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் செய்திகளுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்பட போவதாக, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் செய்திகளுக்கான விதிமுறைகள் விரைவில் வரும்.

புதுடெல்லியில் நடைபெற்ற டைம்ஸ் நெட்வர்க்கின் இந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, "சுதந்திரமாக பேசுவதற்கான உரிமையை குறித்த செயல்திறன் மிகுந்த விதிமுறையை கொண்டு வர வேண்டியுள்ளது. அதே நேரத்தில் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி யாரும் கலகத்தை தூண்டிவிட எதுவாக அமைய கூடாது. இங்கு தான் ஒரு சமநிலையை நாம் கண்டறிய வேண்டியுள்ளது" இப்படியொரு விதிமுறையை உருவாக்குவது, மத்திய அரசுக்கு சவால் மிகுந்த ஒரு காரியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

தகவல் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா ஊழியர் எழுப்பிய குற்றச்சாட்டுகளின் மீது பதிலளித்து பேசிய அவர், அந்நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினரால் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது என்றார். இது குறித்து அவர் கூறுகையில், "பிரிவுகள், சாதிகள் அல்லது இனங்கள் என்று வேண்டுமென்றே வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கும் நபர்களை தண்டிக்கலாம் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் சில பிரிவுகள் இருப்பதை காணலாம். ஆனால் இங்கே, ஒரு அரசியல் கட்சியின் தொடர்பை மேம்படுத்தி, செல்வாக்கை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு வாக்காளரின் சாதிகளைக் குறித்தும் ஆய்வு நடத்த முயற்சி செய்து வருகிறது. இது மிகப் பெரிய மோசடி ஆகும்" என்றார்.

டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் செய்திகளுக்கான விதிமுறைகள் விரைவில் வரும்.

தனது கட்சிக்குள் தாழ்ந்த சாதியினர் அடிப்படையில் நடைபெறும் பிரதிநிதிகளின் தேர்வு குறித்து விளக்க விரும்பிய அவர், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பிரிவைச் சேர்ந்த தான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொதுநல அலுவலகத்தில் பணிபுரிவது, இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று இராணி தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில், "எனது பெயரின் பிற்பகுதியில் உள்ள துணை பெயரால் நான் இந்த இடத்திற்கு வரவில்லை. மாறாக, நான் செய்த பணிகளின் பயனாக இந்த நிலையை அடைந்துள்ளேன்" என்றார்.

கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு, நமோ மொபைல் அப்ளிகேஷன் மூலம் சேகரிக்கப்படும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு அளிக்கப்படுவதாக, வெளியான குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராணி மறுத்தார். அப்ளிகேஷன்களுக்கு இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், சேகரிக்கப்பட்ட பயனர்களின் இருப்பிட தகவல்களை வைத்து கொண்டு வேவு பார்ப்பதாக கூறுவது குழந்தைத்தனமாக உள்ளது என்றார்.

டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் செய்திகளுக்கான விதிமுறைகள் விரைவில் வரும்.

மேலும் எஃப்ஐசிசிஐ-யின் முதல் பெண் தலைவரான நைனா லால் கிட்வாய் எழுப்பிய ஒரு கேள்வியை நினைவுப்படுத்தும் விதமாக, பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனது ஏன்? என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஒரு ஆண் தலைமை வகித்த போது, பாரதீய ஜனதா கட்சிக்குள் பெண்களுக்கான இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஒரு பெண் (சோனியா காந்தி) தலைமை வகிக்கும் மற்ற கட்சியில் (காங்கிரஸ்), இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது" என்றார்.

Best Mobiles in India

English summary
Policy for digital broadcast and news coming soon Smriti Irani; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X