சபாஷ் ரூ.1 லட்சம் ஜெயிச்சுட்டீங்க., அத மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்: Flipkart பேரில் மோசடி- உஷார்

|

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களுக்கு அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதில் அமேசான் நிறுவனம் ஆன்லைன் மூலம் குவிஸ் போட்டி நடத்தி அதில் வெல்பவர்களுக்கு பரிசு வழங்குகிறது. அதுவும் அமேசான் தளம் மூலமாக நடத்தப்பட்டு அதன்மூலமாகவே பரிசு அறிவிக்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டி

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டி

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த குவிஸ் போட்டியானது அமேசான் ஆப்-ல் மட்டுமே இருக்கும். இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஃபிட்பிட் வெர்சா 2 ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அமேசான் குவிஸ் போட்டியில் கேட்டக்கப்படும் கேள்விகள்

அமேசான் குவிஸ் போட்டியில் கேட்டக்கப்படும் கேள்விகள்

அமேசான் குவிஸ் போட்டியில் பொது அறிவு, தற்போதைய நிகழ்வு குறித்த 5 கேள்விகள் கேட்கப்படும், போட்டியில் பங்கேற்பவர்கள் அனைத்து பதிலையும் சரியாக கூற வேண்டும். போட்டியில் வெற்ற பெற்றவர்கள் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?

ஐந்து கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்

ஐந்து கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்

இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அமேசானில் கேட்கப்படும் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதில் கொடுக்க வேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பொது அறிவு மற்றும் தற்போதைய நிகழ்வை சார்ந்தே இருக்கும். இந்த போட்டியில் பங்கேற்க கண்டிப்பாக அமேசான் ஆப் இருக்க வேண்டும்.

பிளிப்கார்ட் பேரில் மோசடி

பிளிப்கார்ட் பேரில் மோசடி

இந்த நிலையில் பிளிப்கார்ட் பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கான சில விவரங்கள் கொடுக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. அதில் முன்புறத்தில் 1 லட்சம் ரூபாய் பரிசு விழந்துள்ளதாகவும், பின் அட்டையில் யூ வொன் 10 லேக்ஸ், அதாவது பத்து லட்சம் ரூபாய் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.

தென்காசி போலீஸார் கூறுகையில்

தென்காசி போலீஸார் கூறுகையில்

இதுகுறித்து தென்காசி போலீஸார் கூறுகையில், சமீபத்தில் இங்கு ஒருவருக்கு ஆன்லைன் சேவை நிறுவனமான பிளிப்கார்ட்டின் பெயரில் வருவது போல தபால் ஒன்று வந்துள்ளது. அதில், அவருக்கு ரூ 1 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், சில தகவல்களை மட்டும் கொடுத்தால் உடனடியாக அந்தப் பரிசு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்துள்ளது.

பரிசைப் பெறுவதற்கு கேட்கப்பட்ட விவரம்

பரிசைப் பெறுவதற்கு கேட்கப்பட்ட விவரம்

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இந்த பரிசைப் பெறுவதற்கு அவருடைய வங்கிக் கணக்கு எண், ஆதார் கார்டு, பான் கார்டு பற்றிய தகவல்கள் வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. பரிசுக்கு எதுக்கு இந்த தகவல் என்று சந்தேகம் அடைந்த அவர் தங்களிடம் இதுகுறித்து புகார் அளித்தார் என தெரிவித்தார்.

எந்தவொரு பரிசையும் அறிவிக்கவில்லை

எந்தவொரு பரிசையும் அறிவிக்கவில்லை

பின்னர் காவல்துறை சார்பில் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசினோம், அப்போது அவர்கள் இதுபோல எந்தவொரு பரிசையும் அறிவிக்கவில்லை எனவும் வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற தகவல்களை ஒருபோதும் கேட்டதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

கும்பலைப் பிடிக்க கண்காணித்து வருகிறோம்

அதன்பிறகு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாற வேண்டாமென பொதுமக்களை எச்சரித்து வருவதாக தெரிவித்தார். அந்த கும்பலைப் பிடிக்கவும் ரகசியமாகக் கண்காணித்து வருகிறோம் எனவும் சந்தேகப்படும்படியாக யாராவது போனிலோ, நேரிலோ இதுகுறித்து பேசினால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுங்கள் எனவும் மக்களிடம் கூறி வருவதாக தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Police warn about fraudulent at the name of flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X