ரூ.1 கோடி செல்போன், ஹார்டு டிஸ்க், கம்பியூட்டர் பறிமுதல்.!
231 பெட்டிகளில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட செல்போன், ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள செல்போன், ஹார்டு டிஸ்க், கம்பியூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகார்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணையும் நடக்கின்றது.

தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி மின்னணு பொருட்கள் கொண்டுவரப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது 231 பெட்டிகளில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட செல்போன், ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications