போலீசுக்கே விபூதி அடித்த ஹேக்கர்கள்! போனில் பேசி 2 லட்சம் மோசடி! இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?
கூகிள் பே, போன்பே, பேடிஎம் என்று நீங்கள் எந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தினாலும் சரி, இந்த செய்தியை கட்டாயம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். மொபைல் வேலெட் ஆப்ஸ்களை அதிகமாக பயன்படுத்த துவங்கிய நமக்கு, இப்போது பல ரூபங்களில் ஆபத்து சூலத்துவங்கிவிட்டது.
ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் முன்னேறி வருவதால், மோசடி செய்பவர்கள் மக்களின் பணத்தை சூறையாட பல ஏமாற்று வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். சரியான விழிப்புணர்வு இருந்த போதிலும், மக்கள் இன்னும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாகின்றனர். இந்த நேரத்தில், PhonePe மொபைல் ஆப்ஸ் மூலம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்ற பெயரில் மோசடிக்காரர்கள் செய்த புது மோசடியை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ஹேக்கர்கள் மற்றும் மோசடிக்காரர்களிடம் இதுவரை பொதுமக்கள் பலர் சிக்கி ஏமாற்றம் அடைந்த தகவலை நாம் அறிந்திருக்கிறோம். முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியே ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டு, ரூ.2,00,000 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி இழந்துள்ளார்.
ஃபோன்பே ஆப்ஸ் வழியாக செய்யப்பட்ட பரிவர்த்தனை மூலம் கேஷ்பேக் ஆஃபரை வென்றதாக டெல்லி காவல்துறை அதிகாரிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கேஷ்பேக்கைப் பெற, அந்த போலீஸ்காரர் வேறு ஒரு மொபைல் ஆப்ஸை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மோசடி PhonePe இல் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போன்பே இல் மேற்கொள்ளப்பட்ட பரிவார்த்தைக்கான கேஷ்பேக் பணத்தை பெற, மூன்றாம் தரப்பு ஆப்ஸை பயன்படுத்தக்கோரி, போலீஸ் அதிகாரியிடம் மோசடிக்காரர்கள் உரையாடியுள்ளனர். அந்த ஆப்ஸ் இல் பல்வேறு கேஷ்பேக் ஆஃபர்கள் காண்பிக்கப்பட்டதால், போலீஸ் அதிகாரி அதை உண்மையான ஆப்ஸ் என்று நம்பியிருக்கிறார். அந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்த சிறிது நேரத்தில், போலீஸ் அதிகாரியின் ஸ்மார்ட்போன் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது.

மோசடி செய்பவர்கள் காவல்துறை அதிகாரியின் ஸ்மார்ட்போனுக்கான முழு அணுகலைப் பெற்றவுடன், அவரது மொபைல் இல் இருந்து பரிவர்த்தனைகளை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியின் வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து மொத்தம் 2,12,000 ரூபாய்களை திருடியுள்ளனர். இந்த மோசடி குறித்து உடனே ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்தில் போலீசார் மோசடி செய்த மர்ம கும்பலை கைது செய்துள்ளனர். இதில் நான்கு பேர் கொண்ட குழு போலீசிடம் மாட்டிக்கொண்டது. இதில் ஒரு தம்பதியினரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், போலியான டிஜிட்டல் வாலட்டுடன் ஐந்து வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்துள்ளனர். இவர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக, காவல்துறை அதிகாரியிடமிருந்து மோசடி செய்த பணம் முழுவதையும் காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். சமீபத்திய சம்பவத்துடன், மோசடி செய்பவர்கள் PhonePe இன் கேஷ்பேக் சலுகைகளை ஒரு ஏமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தினர். எனவே கேஷ்பேக் ஆஃபர்கள் ஆப்ஸிலேயே கிடைக்கும் என்பதையும், அவற்றைப் பெற மூன்றாம் தரப்பு ஆப்ஸ் தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications