Home
News

ஒரே ஆதார் கார்டில் 658 சிம் கார்டு.. அரண்டு போன போலீஸ்.. உங்க ஆதாருடன் எத்தனை சிம் கார்டு இருக்கு?

ஆதார் அட்டை என்பது இந்தியாவின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆதார் அட்டையுடனும் ஒரு மொபைல் எண் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே ஆதார் கார்டில் 658 சிம் கார்டுகள் பதியப்பட்டுள்ள சம்பவம் போலீசாரை மிரளவைத்துள்ளது.

ஒரே ஆதார் கார்டில் (Aadhaar card) பல சிம் கார்டுகள் (SIM card) இணைக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் இந்திய சைபர் கிரைம் பிரிவு (Cyber crime) ஒரே ஆதார் கார்டு எண்ணுடன் 100 முதல் 150 மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. அந்த ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த சிம் கார்டுகளின் சேவை வழங்குனருக்கு சைபர் கிரைம் கடிதம் எழுதியது.

ஒரே ஆதார் கார்டில் 658 சிம் கார்டு.. அரண்டு போன போலீஸ்..

அந்த கடிதத்தில், ஒரே ஆதார் எண்ணுடன் (Aadhaar number) இணைக்கப்பட்டிருக்கும் 150 சிம் கார்டு எண்களை உடனே தடை செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் பிரிவு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் சைபர் கிரைம் போலீசார், கடந்த 4 மாதங்களில் சுமார் 25,135 சிம் கார்டுகளை மோசடி செயல்களில் ஈடுபட்டத்தாக கருதி முடக்கம் செய்தது.

இதேபோல், மற்றொரு வழக்கில் ஒரே ஆதார் அட்டையில் 658 சிம்கார்டுகள் வழங்கப்பட்டதாக சைபர் கிரைம் பிரிவு கண்டறிந்துள்ளது. இதில் போலீசாரையே மிரள வைத்த சம்பவம் என்னவென்றால், இந்த 658 சிம்கார்டுகள் அனைத்துமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். 658 சிம் கார்டுகளும் ஒரே நபரின் பெயரில் பதிப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர்.

விஜயவாடாவில் உள்ள பகுதியில் வசிக்கும், பொலுகொண்டா நவீனின் என்பவர் பெயரில் இந்த சிம் கார்டுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மொபைல் கடைகள் மற்றும் சிம் கார்டுகளை வாங்கக்கூடிய பிற கியோஸ்க்களில் சிம்களை விநியோகிக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைத்து சிம்களையும் முடக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரே ஆதார் கார்டில் 658 சிம் கார்டு.. அரண்டு போன போலீஸ்..

சரி, எப்படி சைபர் கிரைம் பிரிவு 658 சிம் கார்டுகளும் ஒரே ஆதார் நபரின் பெயரில் (aadhaar number user name) பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதை கண்டறிந்தது. டெலிகாம் சிம் சந்தாதாரர் செயற்கை நுண்ணறிவு (AI) என்ற கருவியை பயன்படுத்தி, இத்தகைய மோசடிகளை அதிகாரிகள் முக அங்கீகாரம் (face recognition) மற்றும் சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அடையாளம் காண்கிறது.

இதன் மூலம் ஒரே புகைப்படத்தின் கீழ் பல சிம் கார்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதேபோல், பொதுமக்களின் ஆதார் கார்டுகளிலும் போலியான ஆவணங்களை வழங்கி மோசடிக்காரர்கள் திருட்டுத்தனமாக பல சிம் கார்டுகளை வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இப்படி, உங்கள் ஆதார் அட்டை எண்ணுடன், வேறு யாரும் சிம் கார்டை வங்கியுள்ளார்களா என்று உடனே செக் செய்யுங்கள்.

ஒரே ஆதார் கார்டில் 658 சிம் கார்டு.. அரண்டு போன போலீஸ்..

உங்கள் ஆதார் எண்ணுடன் வேறு எதேனும் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் எளிதான காரியமாகும். இதை செய்ய நீங்கள் எங்கும் அலையவேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தே உங்கள் மொபைலில் இருந்து இந்தத் தகவலைப் பெறலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் (aadhaar linked mobile number) எப்படி சிம் கார்டு விபரங்களை பெறுவது என்று பார்க்கலாம்.

முதலில் https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதன் பிறகு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் 10 இலக்க மொபைல் நம்பரை உள்ளிடவும். இப்போது உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்களை உள்ளிட்டு கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் பெயரில் செயலில் உள்ள அனைத்து சிம் கார்டு விபரங்கள் மற்றும் அந்த சிம் கார்டு உடன் தொடர்புடைய நம்பர்களின் விபரங்களை காண்பிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Police finds 658 SIMs linked to one Aadhaar card How to find which mobile number linked to your Aadhaar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X