Home
News

சுந்தர் பிச்சை மீது போலீசார் வழக்குபதிவு: பின்னர் எந்தவித தொடர்பு இல்லாததால் நீக்கம்.!

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ வெளியானது தொடர்பாக பெலூப்பூர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதியன்று புகார் அளித்தார்.

 5 லட்சத்திற்கு மேல் பார்வைகள்

பின்பு தன்னுடைய வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பிரதமரை அவதூறாக விமர்சித்து வீடியோ வந்ததாகவும். அதன் பின்னர் 5 லட்சத்திற்கு
மேல் பார்வைகள் கொண்ட அதே வீடியோவை யூடியூபிலும் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை

மொத்தம் 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை

எனவே இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தனக்கு 8500-க்கும் மேற்பட்ட மிரட்டல்அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.பின்பு இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரதமர் மீதான அவதூறு வீடியோ வெளியிட்டது தொடர்பாக மொத்தம் 17 பேர்மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

7 பேரில் கூகுள் தலைமை செயல்

குறிப்பாக அந்த 17 பேரில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சிஇஓ சுந்தர் பிச்சையும் ஒருவர். பின்னர் இந்த வழக்கை சரியாக ஆய்வு செய்த காவல்துறையினர் இந்த புகாரில் தொடர்பு இல்லாததால் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் பெயரை எப்.ஐ.ஆர்-ல் இருந்து நீக்கினர்.

ல் சுந்தர் பிச்சை

அதேபோல் இந்த பட்டியலில் சுந்தர் பிச்சை மட்டுமல்லாது கூகுள் இந்தியாவில் தலைமை அதிகாரி சஞ்சய் குமார் குப்தா உள்ளிட்ட மேலும் 3 கூகுள் அதிகாரிகளின் பேரும் சேர்கப்பட்டிருந்தது. குறிப்பாக இவர்களில் 4 பேரில் பெயருமே எப் ஐ ஆர்-ல் இருந்து நீக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

சிபூரை சேர்ந்த இசையமைப்பாளர்கள்

வெளிவந்த தகவலின்படி, பிரதமர் குறித்து அவதூறு வீடியோவை உருவாக்கிய காசிபூரை சேர்ந்த இசையமைப்பாளர்கள் மற்றும் இசை
நிறுவனம் ஒன்று உட்பட பிறர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களின் மீது சட்டம், மிரட்டல், சதித்திட்டம்,அமைத்திக்கு பங்கம் விளைவிப்பது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Police file case against sundar pichai: Later dismissed for lack of any connection : : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X