பயங்கரமான ஆளா இருக்கியேப்பா- காதில் மைக்ரோசிப் பொருத்தி காவலர் தேர்வு எழுதிய இளைஞர்: சிக்கியது எப்படி?- வீடியோ

|

மகாராஷ்டிரா போலீஸ் தேர்வில் காதில் மைக்ரோ சிப் பொருத்தி தேர்வு எழுத வந்த நபரை கண்டறிந்த போலீஸார் அவரது காதில் இருந்து மைக்ரோ சிப்பை அகற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஏமாற்ற என்ன ஒரு முயற்சி

ஏமாற்ற என்ன ஒரு முயற்சி

மகாராஷ்டிராவின் ஜல்கானில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் மோசடி செய்த 24 வயது இளைஞனை போலீஸார்கள் கைது செய்தனர். அவர் காதில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்பை போலீஸார்கள் அகற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சய் பாண்டே பகிர்ந்துள்ளார். இது அழைப்பைப் பெற பயன்படுத்தப்படும் ப்ளூடூத் சாதனத்துடன் கூடிய மைக்ரோ சிப் ஆகும். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த அவர், "ஏமாற்ற என்ன ஒரு முயற்சி" என குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசிப் ப்ளூடூத் கருவி

மைக்ரோசிப் ப்ளூடூத் கருவி

போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வில் ஏமாற்ற மைக்ரோசிப் ப்ளூடூத் கருவியை பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பாளர் அவரது காதுக்குள் ஒரு மைக்ரோசிப் இருப்பதை கண்டுபிடித்தனர். அதேபோல் இந்த அழைப்பை பெறுவதற்கான ப்ளூடூத் சாதனத்தை அவரது காலில் கட்டியிருக்கிறார். இதன்மூலம் அவரது உதவியாளர் அவருடைய காதுக்குளுக்குள் உள்ள சிப் மூலமாக பதில்களை வழங்கியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் தேர்வில் பயன்படுத்தப்பட்ட மைக்ரோசிப்

குற்றம் சாட்டப்பட்டவர் பிரதாப் சிங் பலோத் என்பவர் என்பதும் இவர் அவுரங்காபாத்தில் வசிப்பவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜல்கானில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் மைக்ரோசிப் மற்றும் ப்ளூடூத் கருவி பயன்படுத்தி ஏமாற்ற முயன்ற 24 வயது நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் காதில் இருந்த மைக்ரோசிப் கண்டறியப்பட்டு மிகவும் நுட்பமாக அகற்றப்பட்டது. அந்த பகுதியில் உள்ள விவேகானந்த் பிரதிஷ்டன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட நபர்

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட நபர்

தேர்வு தொடங்குவதற்கு முன்பு கண்காணிப்பு அதிகாரிகள் அவர் சந்தேகத்திற்கு இடமாக தேர்வு அறை பகுதியில் நடந்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டுள்ளனர். அதேபோல் இரண்டு முறை கழிப்பறைக்கு சென்றதாகவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் தனது காலில் ப்ளூடூத் சாதனத்தை கட்டி இருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. இது அழைப்பை பெற பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் பதில்களை பெற முடிந்ததாக கூறப்படுகிறது. அவுரங்கபாத்தின் வைஜாபூரை சேர்ந்த பலோத் என்பவர் மீது ஐபிசி பிரிவி 420-ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

டிஜிபி சஞ்சய் பாண்டே பகிர்ந்த வீடியோ

டிஜிபி சஞ்சய் பாண்டே பகிர்ந்த வீடியோ

இந்த வீடியோ ஆனது டிஜிபி சஞ்சய் பாண்டே மூலம் பகிரப்பட்டது. இது பெரிதளவு வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்பங்கள் எதிர்பாராத அளவிற்கு வளர்ந்து வருகிறது. அதை அனுபவிக்க ஆசை இருக்கும் அதேசமயத்தில் அந்த சாதனங்களை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது முக்கியம். தொழில்நுட்ப முன்னேற்றங்களை எந்த விதத்திலும் தீங்கிழைக்கும் காரியத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதிகாரப்பூர்வ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அதிகாரப்பூர்வ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் தொடங்கி, இணையத்தை அணுகும் ஒவ்வொரு சாதனத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும். ஸ்மார்ட்போன்களில் தங்களின் புகைப்படங்கள், வங்கி விவரங்களில் தொடங்கி பல்வேறு முக்கிய தகவல்கள் சேமித்து வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. எனவே அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது மிக அவசியம். எந்த தேவை இருந்தாலும் அதிகாரப்பூர்வ செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்து அணுக வேண்டும். வங்கி விவரங்கள் தொடர்பான எந்தவொரு அணுகலையும் அதிகாரப்பூர்வ இல்லாத பட்சத்தில் பகிர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதிகாரமற்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்

அதிகாரமற்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்

தங்களது செல்போனுக்கும் வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம். இந்த லிங்க்கை கிளிக் செய்வது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தங்களது குடும்பம் சார்ந்த பெண்கள் உட்பட குடும்பத்தார் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் கேட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவும்.

உடனே பிளாக் செய்யவும்

உடனே பிளாக் செய்யவும்

செல்போன் தொலைந்துவிட்டால் உடனே பிளாக் செய்யவும், ஆப் டவுன்லோட் செய்து அதில் உங்கள் கைரேகை பதிவு செய்வதில் கவனம் தேவை, வாட்ஸ்அப் மெசேஜ், பேஸ்புக் மெசேஜ் மூலம் தங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த நபர் கணக்கு போல் உருவாக்கி அவசரம் என பணம் கேட்பார்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். ஏடிஎம் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Police arrested a youth who Wrote a police exam With Using a Microchip

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X