செம டுவிஸ்ட்: செல்போன் இல்ல செல்போன் டவரையே திருட முயற்சித்த கும்பல்- பக்கா பிளான்!

|

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பயன்பாடின்றி இருந்த டவர்களை தனித்தனியாக கழற்றி கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீஸார் கையும் களவும் பிடித்து கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதி அருகே இருக்கிறது மறவாமதுரை எனும் கிராமம். இங்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் 13 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்து வந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட கும்பல்

மூன்று பேர் கொண்ட கும்பல்

இதை அறிந்து கொண்ட மூன்று பேர் கொண்ட கும்பல் செல்போன் டவரை முழுவதுமாக கொள்ளையடிக்கு திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அங்கேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து செல்போன் டவர் பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றியுள்ளனர்.

இயந்திரங்கள், ஜெனரேட்டர்களை லாரியில் ஏற்ற முயன்ற கும்பல்

இயந்திரங்கள், ஜெனரேட்டர்களை லாரியில் ஏற்ற முயன்ற கும்பல்

மூன்று பேரும் டவரில் ஏறி கம்பிகள், பிற உபகரணங்கள் என அனைத்தையும் கழற்றத் தொடங்கியுள்ளனர். அதோடு மட்டுமின்றி டவரின் அருகாமையில் இருக்கும் இயந்திர அறைக்கு சென்று அங்கிருக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் என அனைத்தையும் கழற்றி லாரியில் ஏற்ற தயாராகியுள்ளனர்.

Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!

சந்தேகமடைந்த இடத்தின் உரிமையாளர்

சந்தேகமடைந்த இடத்தின் உரிமையாளர்

இதை பார்த்த அந்த இடத்தின் உரிமையாளர் அவர்கள் தனியார் செல்போன் டவரின் பணியாளர்கள் என நினைத்து பேச்சுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே இடத்தின் உரிமையாளர் சந்தேகம் அடைந்ததாகவும் அதன்பேரில் போலீஸாரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

திருடர்களை கைது செய்த போலீஸார்

திருடர்களை கைது செய்த போலீஸார்

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் செல்போன் டவர் கொள்ளையடிக்க முயற்சித்த 3 பேரை கைது செய்தனர். அதோடு கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு லாரிகள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

file images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Police Arrested a Gang who Tried to Steal a CellPhone Tower in Pudukkottai District

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X