கூகுள் பே யூஸ் பண்றீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க.. போலீஸார் அறிவுரை.. ஏன்?
இந்தியாவில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதிலும் போன்பே, பேடிஎம்
செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால் கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கூகுள் பே அல்லது எதாவது ஒரு யுபிஐ செயலி மூலம் தெரிந்தே உங்களுக்கு பணத்தை அனுப்புகிறார்கள். அதன்பின்னர் அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன். நான் தவறுதலாக அனுப்பிய பணத்தை மீண்டும் எணக்கு அதே எண்ணில் அனுப்பி வையுங்கள் என கேட்பார்கள்.

நீங்களும் இரக்கப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பினால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை யாராவது உங்களுக்கு தவறாகப் பணம் அனுப்பியிருந்தால் அந்த அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக வாங்கி செல்லுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக தெரியாத நபர் உங்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டு அதை கூகுள் பே வழியாக அனுப்ப சொல்லாமல் அதற்கு பதிலாக மேசேஜ் மூலம் லிங்க் அனுப்பினால் அதை கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக அவர்கள் அனுப்பும் லிங்க் போலியானது. அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் நமது வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும். பணம் முழுவதும் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போலி லிங்க்-ஐ தொடவே கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உங்களது மொபைல் போன் திருடு போய்விட்டால் அல்லது தொலைந்துவிட்டால் போனில் இருக்கும் யுபிஐ வழியாக நமது அக்கவுண்டில இருக்கும் பணம் அபேஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனே யுபிஐ ஐடியை பிளாக் செய்வது மிகவும் அவசியம். இப்போது போன் தொலைந்துவிட்டால் யுபிஐ பிளாக் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
அதாவது கூகுள் பே (Google Pay) செயலியை வைத்திருந்தால் 18004190157 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைக் கொடுத்து உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். அதேபோல் நீங்கள் போன்பே (PhonePe) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 02268727374 அல்லது 08068727374 என் எண்ணை அழைத்து உடனே யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.

குறிப்பாக நீங்கள் பேடிஎம் (Paytm) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 01204456456 என்ற எண்ணை அழைத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். குறிப்பாக கஸ்டமர் கேர் அதிகாரிகள் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு தான் யுபிஐ ஐடியை பிளாக் செய்வார்கள். அதுவும் பேடிஎம் செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் இணையதளத்தின் 24 மணி நேர ஹெல்ப் செக்ஷனை தொடர் கொண்டு புகார் கொடுக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
மேலும் நாடு முழுவதும் இந்த யுபிஐ மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது . அதுவும் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். எனவே அனைத்து இடங்களிலும் யுபிஐ செயலிகளை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும்.
photo credit: amarujala.com
source: hindutamil.in


Click it and Unblock the Notifications