Home
News

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. POCO X7 ஒருமுறை மட்டும் சலுகை.. பட்ஜெட்ல மாஸ் போன்.. உடனே வாங்கிடுங்க..

போக்கோ (POCO) நிறுவனம் இன்று அதன் புதிய போக்கோ எக்ஸ்7 (POCO X7) என்ற ஸ்மார்ட்போன் மாடலின் விற்பனை இந்திய சந்தையில் முதல் முறையாக திறந்து வைத்துள்ளது. ஜனவரி 20, 2025 ஆம் தேதியான இன்று துவங்கும் இந்த முதல் நாள் விற்பனையில் போக்கோ நிறுவனம் இந்த POCO X7 போனின் மீது ஒரே ஒரு நாள் சிறப்பு சலுகையை (POCO X7 one day special offer) அறிவித்துள்ளது. இந்த போனை ஆரம்ப நாளிலே வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு நாள் சிறப்பு சலுகையாக POCO புதிய விலை குறைப்பை அறிவித்துள்ளது.

POCO நிறுவனம் கடந்த வாரம் இந்த POCO X7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது இதன் விற்பனை அமேசான், மற்றும் பிற ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆப்லைன் கடைகள் வழியாக இன்று முதல் துவங்கியுள்ளது. முதல் நாள் விற்பனையான இன்று போக்கோ எக்ஸ்7 (POCO X7) மீது சிறப்பு ஒரு நாள் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. POCO X7 ஒருமுறை மட்டும் சலுகை..

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது:

இந்த குறிப்பிட்ட ஸ்பெஷல் சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும். போக்கோ எக்ஸ்7 (POCO X7) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 19,999 என்ற ஆரம்ப விலை முதல் வாங்க கிடைக்கிறது. இதில் ரூ. 2000 மதிப்பிலான உடனடி சலுகை சேர்க்கப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை தவறவிட்டால், நாளை முதல் இந்த புதிய போக்கோ எக்ஸ்7 (POCO X7) போனை வேறு விலையில் நீங்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

POCO X7 ஸ்மார்ட்போனின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் விலை ரூ. 21,999 என்ற நாளை முதல் வாங்க கிடைக்கும். அதேபோல், போக்கோ எக்ஸ்7 போனின் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 23,999 என்ற விலை முதல் வாங்க கிடைக்குமென்று POCO நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் Yellow, Cosmic Silver மற்றும் Glacier Green ஆகிய 3 நிறங்களில் வருகிறது.

போக்கோ எக்ஸ்7 (POCO X7):

இந்த முதல் நாள் விற்பனையுடன் இன்னும் கூடுதல் விலை குறைப்பை எதிர்பார்ப்பவர்களுக்காக, அமேசான் நிறுவனம் போக்கோ எக்ஸ்7 (POCO X7) ஸ்மார்ட்போன் மீது ரூ. 2000 வரையிலான ICICI வங்கி கார்டு சிறப்பு சலுகையை வழங்குகிறது. இத்துடன், கூடுதலாக ரூ. 2000 மதிப்பிலான எக்ஸ்சேஞ் சலுகையையும் இந்த போனின் மீது வாடிக்கையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்7 சிறப்பம்சம் (POCO X7 Specifications) :
- 6.67 இன்ச் அளவு கொண்ட 1.5K OLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்
- 8GB LPDDR4X ரேம்
- 128GB / 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 14 உடன் சியோமி ஹைப்பர் ஓஎஸ்
- 50MP + 8MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 20MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 45W பாஸ்ட் சார்ஜிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X7 Sale In India One Day Only OFFER Price Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X