Home
News

வேட்டை ஆரம்பம்.. ஹர்திக் பாண்டியாவின் Poco டீசர்.. ஹைப் ஏற்றும் அல்டிமேட் ப்ரீடேட்டர் போன்.. எந்த மாடல்?

போகோ (POCO) நிறுவனம் வெளியிட்ட புதிய டீசர் சமூக வலைத்தளங்களில் புயலை உருவாக்கியுள்ளது. இந்த வைரல் புயலை உருவாக்கியதற்கு போகோ எக்ஸ்6 சீரிஸ் (POCO X6 Series) ஸ்மார்ட்போன் ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா தான்.

போகோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசர் வீடியோவில் ஹர்திக் பாண்டியா தான் புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ளார். போகோ எக்ஸ்6 சீரிஸ் (POCO X6 Series) ஸ்மார்ட்போனின் வருகையை குறிக்க தான் இத்தகைய அலப்பறை செய்யப்பட்டுள்ளது. போகோ நிறுவனத்திடம் இருந்து 2024ல் வெளிவரவிருக்கும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக இந்த போகோ எக்ஸ்6 சீரிஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வேட்டை ஆரம்பம்.. ஹர்திக் பாண்டியாவின் Poco டீசர்.. ஹைப் ஏற்றும் போன்..

காரணம், இந்த புதிய போகோ எக்ஸ்6 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா (MediaTek Dimensity 8300 Ultra) சிப்செட்டை கொண்டிருக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுகிறார். தி ஹண்ட் பிகின்ஸ் (The Hunt Begins) என்ற ஸ்லோகன் உடன் இந்த விளம்பரம் முடிகிறது. இந்த சாதனம் ரூ.20,000 விலை புள்ளியில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா (India's First MediaTek Dimensity 8300 Ultra Smartphone):

வேட்டை ஆரம்பம் என்று குறிக்கும் இந்த வார்த்தைகளுடன் போகோவின் அடுத்த புது வரவான போகோ எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் வருகையை நிறுவனம் உறுதி செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, போகோ பிராண்டின் அம்பாஸ்டராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா (MediaTek Dimensity 8300 Ultra) சிப்செட் உடன் அறிமுகமாகும் இந்த சந்தானத்திற்கு ஹைப் இப்போதே எகுறுகிறது.

இதே சிப்செட் இதற்கு முன்பு ரெட்மி K70E ஸ்மார்ட்போனில் இடம்பெற்று, சியோமியின் சொந்த சந்தையான சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இதே மாடல் தான் இந்தியாவில் பெயர்மாற்றத்துடன் களமிறங்குகிறது என்று சில லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு முந்தைய மாடலான போகோ எக்ஸ்5 ப்ரோ சாதனத்தின் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாமா?

வேட்டை ஆரம்பம்.. ஹர்திக் பாண்டியாவின் Poco டீசர்.. ஹைப் ஏற்றும் போன்..

உண்மையை சொல்ல போனால், போகோ எக்ஸ்5 ப்ரோ சாதனத்தில் இடம்பெற்ற ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்டை விட, இப்போது வரவிருக்கும் புதிய மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா பல மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் மேம்படுத்தப்பட்டது. இதனால், போகோ எக்ஸ்6 சீரிஸ் சற்று விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

போகோ எக்ஸ்6 லான்ச் (POCO X6 Launch):

மற்றொரு லீக் தகவல், இந்த வரவிருக்கும் போகோ சாதனம் இதற்கு முன்பு வெளியான ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) சாதனமாக இருக்க கூடும் என்ற கருத்தை பரிந்துரைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போகோ எக்ஸ்6 (POCO X6) சாதனம் வரும் ஜனவரி 4ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

போகோ எக்ஸ்6 சீரிஸ் தொடரில், போகோ எக்ஸ்6 (POCO X6) மற்றும் போகோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro) என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்த சீரிஸ் வரிசையில், நிறுவனம் போகோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) என்ற மாடலையும் கூட அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 Series Smartphone Teaser Goes Viral The Hunt Begins With Hardik Pandya Video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X