Home
News

மறந்துடாதீங்க.. POCO X6 மற்றும் POCO X6 Pro நாளை அறிமுகம்.. லைவ் பார்ப்பது எப்படி? என்ன விலை என்ன சிறப்பம்சம்?

போகோ (POCO) நிறுவனத்திடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போகோ X6 சீரிஸ் (POCO X6 Series) ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் நாளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அறிமுக நிகழ்வை எந்த நேரத்தில், எப்படி லைவ் பார்ப்பது என்ற விபரத்தை இப்போது பார்க்கலாம்.

போகோ நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த போகோ X6 சீரிஸ் சாதனங்களாகும். இந்த சீரிஸ் கீழ் நிறுவனம், போகோ X6 (POCO X6) மற்றும் போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) என்ற இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மறந்துடாதீங்க.. POCO X6 மற்றும் POCO X6 Pro நாளை அறிமுகம்.. என்ன விலை?

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுகம் ஜனவரி 11ம் தேதி, இந்திய நேரப்படி 5:30 மணி அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது போகோ நிறுவனத்தின் யூடியூப் (YouTube) மற்றும் சமூக வலைத்தள சேனல்கள் வழியாக லைவ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை லைவ் பார்க்க https://www.youtube.com/watch?v=-Dw4NJO1PDs லிங்கை கிளிக் செய்யவும்.

போகோ X6 (POCO X6) மற்றும் போகோ X6 ப்ரோ (POCO X6 Pro):

இந்த போகோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 8300-Ultra SoC) உடன் இந்தியாவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட் ஆகும். இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்திடாதா பெர்பார்மென்ஸ் மற்றும் வேகம் கிடைக்கும். இதில் தரமான AI அம்சங்களும் அடங்கும்.

போகோ X6 மற்றும் போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இதுவரை இல்லாத பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi's HyperOS) உடன் வரும் முதல் போகோ சாதனமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலை பிரிவில் இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது.

போகோ X6 ப்ரோ சிறப்பம்சம் (POCO X6 Pro Specifications): அதன்படி, இந்த போகோ X6 ப்ரோ சாதனம் 6.7" இன்ச் கொண்ட LTPS AMOLED டிஸ்பிளேவை (Display) 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு 1.2K ரெசொலூஷன் (Resolution) கொண்ட ஸ்மார்ட்போன் சாதனமாகும்.

இது 64MP உடன் OIS அம்சத்துடனான பிரைமரி கேமரா (Camera), 8MP அல்ட்ரா வைடு (Ultra-wide) மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் (Macro lens) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை (Triple rear camera) கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரி (Battery) உடன் 67W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) கொண்டிருக்கும். தெரியாதவர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் பிரிவில் அதிகப்படியான AnTuTu மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.19,000 விலை முதல் ரூ.29,000 விலைக்குள் பல ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம், போகோ X6 ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்திய ரசிகர்கள் ரூ.20,000 விலைக்குள் வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 series is all set for a Global launch Here is how to watch it Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X