பட்ஜெட்ல நச்சுனு ஒரு போன்..AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. ஆரம்பமே அரளுது.. அறிமுக சலுகை மிரளுது.. எந்த மாடல்?
போகோ நிறுவனம் அதன் லேட்டஸ்ட் சாதனத்தை 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்துள்ளது. போகோ X6 (POCO X6) என்ற ஸ்மார்ட்போன் இன்று ரூ.20,999 என்ற விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மீது அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இன்று முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த Poco இன் புதிய போன், Poco X6, பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் பல அற்புதமான அம்சங்களுடன் ரூ.20,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Poco X6 ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்லிம்மான சைசில் உங்கள் கைகளுக்கு அடக்கமான சாதனமாக வெளிவந்துள்ளது.

POCO X6: அதனால் இது உங்கள் கையில் கட்சிதமாக பொருந்துகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் கொண்ட AMOLED பிரைட் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃபிரஷ் ரேட் உடன் 1.5K ரெசொலூஷன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே டால்பி விஷன், லைட்டினிங் பாஸ்ட் டச் சாம்பிளிங் அம்சத்துடன் வருகிறது. இதனால், உங்களுக்கு மிகவும் கிளியரான வீடியோ அனுபவம் கிடைக்கிறது.
இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் உடன் வருகிறது. இதனால் உங்களுக்கு மல்டி டாஸ்கிங் எந்தவிதமான தாமதமும் இல்லாமல், ஹேங் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 12ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் 24ஜிபி ரேம் ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.
இந்த புதிய போகோ X6 ஸ்மார்ட்போன் சாதனம் 5100mAh பேட்டரி உடன் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் POCO X6 இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் AI பேஸ் அன்லாக் ஆதரவையும் கொண்டுள்ளது. இரண்டு மடங்கு அதிக பாதுகாப்பை இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வழங்கியுள்ளது.

இதுவொரு பட்ஜெட் செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 10 வகையான 5ஜி பேண்ட் அலைவரிசையில் வேலை செய்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 13 உடன் MIUI 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது மிகவும் எளிமையான யூசர் பிரெண்ட்லி இன்டெர்பெஸ் உடன் வேலை செய்கிறது.
இந்த புதிய POCO X6 ஸ்மார்ட்போன் சாதனம் 3 வருட மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் உடன் வெளிவரவிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளதால், இதன் மீது சில வியக்கத்தகு அறிமுக சலுகைகளும் கிடைக்கிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் ஸ்னோஸ்ட்ரோம் வைட் ஆகிய 2 நிறங்களில் வருகிறது.
POCO X6 Offers: இந்த POCO X6 ஸ்மார்ட்போன் சாதனம் ICICI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.3000 தள்ளுபடியை வழங்குகிறது. பட்ஜெட் விலையில் ஒரு அற்புதமான 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க ஐடியா செய்தால், உடனே இந்த போனை ஆர்டர் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications