Home
News

வெளுத்துவிட்ட ஹர்திக் பாண்டியா போன்.. POCO X6 Pro ஸ்கோர் வெளியானது.. எத்தனை சிக்ஸர்? எத்தனை பவுண்டரி?

போகோ (POCO) பிராண்ட் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் புதிய போகோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 11ம் தேதி அறிமுகம் செய்கிறது. அதற்கு முன்பாக போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) போனின் ஸ்கோர் விபரம் வெளியாகியுள்ளது.

போகோ நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் வரிசையான போகோ X6 சீரிஸ் சாதனத்தை இந்தியாவில் பொங்கல் பண்டிகைக்கு (Pongal festival) முன்பாக அறிமுகம் செய்கிறது. இது ஜனவரி 11ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் போகோ X6 (POCO X6) மற்றும் போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) என்ற 2 மாடலைகளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளுத்துவிட்ட ஹர்திக் பாண்டியா போன்.. POCO X6 Pro ஸ்கோர் வெளியானது..

இந்த ஸ்மார்ட்போனின் வருகையை உறுதி செய்யும் டீசர் வீடியோ கடந்த வாரம் வெளியானது. இதில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தோன்றி "தி ஹண்ட் பிகின்ஸ்" (The Hunt Begins) என்ற ஸ்லோகன் உடன் போகோ X6 சீரிஸ் வருகையை உறுதி செய்தார். போகோ பிராண்டின் அம்பாஸிடர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா நடித்த இந்த டீசர் வெளியாகி வைரல் ஆனது. போகோ X6 போனுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

போகோ X6 ப்ரோ (POCO X6 Pro):

இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் வெளியாகும் போகோ X6 ப்ரோ சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 சிப்செட் (MediaTek Dimensity 8300 SoC) மற்றும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டத்துடன் (stainless steel vapor chamber cooling system) அறிமுகம் செய்யப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, இந்த மிட்-ரேஞ் ஸ்மார்ட்போனின் (Mid-range smartphone) பெர்ஃபார்மென்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சாதனம் 1.4 மில்லியன் பாயிண்ட்ஸ்களை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான ஆண்டுடு (AnTuTu) மதிப்பெண் விபரங்கள், போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் 1,464,228 மதிப்பெண்களை ஸ்கோர் செய்துள்ளது என்று காண்பித்துள்ளது. இந்த ஸ்கோர் உடன் போகோ X6 ப்ரோ சாதனம் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் மிட் ரேஞ் ஸ்மார்ட்போனாக (Best performance mid-range smartphone) வலம்வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரீபிராண்ட் செய்யப்பட்ட Redmi K70E என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தான் போகோ வரிசையில் சியோமியின் ஆண்ட்ராய்டு 14 உடன் ஹைப்பர் ஓஎஸ் (Android 14-based HyperOS) இயங்குதளத்தை கொண்ட முதல் சாதனமாகும். இந்த போகோ X6 ப்ரோ சாதனம் 2 ஆண்டு மேஜர் சாப்ட்வேர் அப்டேட்டை (Software update) பெரும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.

வெளுத்துவிட்ட ஹர்திக் பாண்டியா போன்.. POCO X6 Pro ஸ்கோர் வெளியானது..

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் எந்த தடையுமின்றி ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளம் வரை சரியான முறையில் அப்டேட்டை பெரும் என்ற உத்தரவாதத்தை போகோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இப்போது அமேசான் (Amazon) தளத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கான விளம்பரங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

போகோ X6 ப்ரோ சிறப்பம்சம் (POCO X6 Pro Specifications):

அதன்படி, இந்த போகோ X6 ப்ரோ சாதனம் 6.7" இன்ச் கொண்ட LTPS AMOLED டிஸ்பிளேவை (Display) 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு 1.2K ரெசொலூஷன் (Resolution) கொண்ட ஸ்மார்ட்போன் சாதனமாகும்.

இது 64MP உடன் OIS அம்சத்துடனான பிரைமரி கேமரா (Camera), 8MP அல்ட்ரா வைடு (Ultra-wide) மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் (Macro lens) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை (Triple rear camera) கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரி (Battery) உடன் 67W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் பெர்பார்மென்ஸ் பிரிவில் டைரக்ட் சிக்ஸர் ஸ்கொர் செய்துள்ளது. மற்ற செக்மென்ட்டில் பல பவுண்டரிகளை குவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 Pro With LTPS AMOLED Display and Dimensity 8300 SoC Scored 1464228 Points In AnTuTu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X