மகாபிரபு நீங்களா? பட்ஜெட்ல அள்ளி கொடுக்குறீங்களே.. செதரவிட்ட POCO X6 Pro அறிமுகம்.. என்ன விலை?
போகோ (POCO) பிராண்ட் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் புதிய போகோ X6 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் போகோ X6 (POCO X6) மற்றும் போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) என இரண்டு மாடல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், பட்ஜெட் விலையில் அட்டகாசமான பல சிறப்பம்சங்களை ஒன்றாக பேக் செய்து, தலைசிறந்த ஸ்மார்ட்போன் சாதனமாக பட்ஜெட் செக்மென்ட்டிற்குள் (Budget segment smartphone) களமிறங்குள்ள போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போகோ X6 ப்ரோ போனின் முழு விபரம், விற்பனை தேதி மற்றும் விலை பற்றிய விபரங்கள் இதோ.

போகோ X6 ப்ரோ சிறப்பம்சம் (POCO X6 Pro Specifications):
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் கொண்ட 1220 x 2712 பிக்சல் உடன் கூடிய 1.5K CrystalRes AMOLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rat) உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்புடன் வருகிறது. இந்த டிஸ்பிளே வழங்கமான 28% அதிக திறன் கொண்ட FHD+ டிஸ்பிளேவாக டால்பி விஷன்னுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 8300-Ultra SoC) உடன் வெளிவரும் சாதனமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிப்செட் உடன் இந்த சாதனம் AnTuTu ஸ்கோரிங் போர்டில் 1.4+ மில்லியன் மதிப்பெண்களை பெற்று சிறந்த பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் (Storage) வரை வருகிறது. அதிக நேர தடையில்லாத கேம்ஸ் (Games) மற்றும் வீடியோ பயன்முறையின் போது, ஸ்மார்ட்போனில் ஓவர்ஹீட்டிங் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக இந்த சாதனத்தில் 5000mm VC வெப்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில், இது கேமர்களுக்கான வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

கேமர்களின் அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற வைல்டுபூஸ்ட் 2.0 (Wildboost 2.0 Gaming Optimization) மோட் உடன் வருகிறது. இந்த போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்றொரு சூப்பர் ஸ்பெஷல் அம்சம் என்னவென்றால், இந்தியாவில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) இயங்குதளத்துடன் அறிமுகமாகும் முதல் சாதனமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் 64MP கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்தை OIS ஆதரவுடன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64MP உடன் OIS அம்சத்துடனான பிரைமரி கேமரா (Camera), 8MP அல்ட்ரா வைடு (Ultra-wide) மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் (Macro lens) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை (Triple rear camera) நிறுவனம் வழங்கியுள்ளது. எக்ஸ் சீரிஸ் வரிசையில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பெரும் முதல் சாதனம் இதுவாகும்.
இது 5000mAh பேட்டரி (Battery) உடன் 67W பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) ஆதரவுடன் வருகிறது. இந்த போகோ X6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் (Black), க்ரேய் (Grey) மற்றும் எல்லோவ் (Yellow) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக போகோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் வீகன் லெதர் பேக் பேனல் (Vegan leather back panel) வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போகோ X6 ப்ரோ விலை (POCO X6 Pro Price): இரண்டு வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.24,999 விலையிலும், 12ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.26,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக அறிமுக சலுகையாக ரூ.2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. POCO X6 சீரிஸ் சாதனங்கள் ஜனவரி 16ம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இதன் ப்ரீ-புக்கிங் இன்றிரவு 8 மணி முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








