Home
News

மார்ச் 28 குறிச்சு வைங்க- பிளிப்கார்ட் மூலம் இந்தியாவுக்கு வரும் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி!

போக்கோ இந்தியா தற்போது போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனத்தை மார்ச் 28 அன்று இந்தியாவிற்கு வரும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய போக்கோ சாதனங்கள் போன்று போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனும் பிளிப்கார்ட் மூலம் பிரத்யேகமாக கிடைக்கும் எனவும் இதன் விலை குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சாதனம் மலிவு விலை மாறுபாடாக இருக்கும் என கூறப்படுகிறது. நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் விலை தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

மார்ச் 28 முதல் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

மார்ச் 28 முதல் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ நிறுவனம் தொடர்ந்து கவர்ச்சிகரமான விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி மார்ச் 28 முதல் பிளிப்கார்ட் மூலமாக இந்தியாவிற்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனத்தின் இந்திய மாடல் 64 எம்பி முதன்மை கேமரா உடன் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டுமே இந்தியாவில் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனத்துக்கும் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சாதனத்துக்குமான வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி வசதி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த அம்சமும் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனின் உள்ள டிஸ்ப்ளேவிற்கு ஒத்ததாக இருக்கிறது.

64 எம்பி முதன்மை கேமரா

64 எம்பி முதன்மை கேமரா

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 1080 பிக்சல் வீடியோ பதிவு திறன் கொண்ட 16 எம்பி செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிப்செட் வரம்பு காரணமாக போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி போன்றே 4கே வீடியோ பதிவை ஆதரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. அதேபோல் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியோடு வருகிறது. மறுபுறம் வரும் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனத்தின் இந்திய மாறுபாடு அதே 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருமா என்பது தெரியவில்லை.

ரூ.20,000-க்கு குறைவாக இருக்கும் என தகவல்கள்

இந்தியாவில் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி சாதனமானது ரூ.20,000-க்கு குறைவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சாதனத்தை விட மிகவும் மலிவு விலையில் இந்த சாதனம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு சாதனங்களுக்கும் இடையே கேமரா மட்டுமே மாறுபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ரூ.20,000-க்கு குறைவாக இருக்கும் என தகவல்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X