Home
News

108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 67வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி- விலை இதோ!

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது MWC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 67 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ

போக்கோ நிறுவனம் MWC 2022 நிகழ்வில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது போக்கோ எக்ஸ் 4 ப்ரோ மற்றும் போக்கோ எம்4 ப்ரோ ஆகும். போக்கோ எக்ஸ் 4 ப்ரோ ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்ட முதல் போக்கோ ஸ்மார்ட்போன் ஆகும். போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.

ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகும். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.25,300 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.29,500 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் லேசர் பிளாக், லேசர் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 2) முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ்4 ப்ரோ தற்போது வரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விவரக்குறப்புகள்

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விவரக்குறப்புகள்

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விவரக்குறப்புகள் குறித்து பார்க்கையில், போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 1,080 x 2,400 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67-இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி வரை ரேம் மற்றும் 11 ஜிபி வரை டைனமிக் ரேம் விரிவாக்க ஆதரவை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

108-மெகாபிக்சல் முதன்மை சென்சார்

108-மெகாபிக்சல் முதன்மை சென்சார்

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 108-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco X4 Pro 5G Smartphone Launched in India With 108MP Camera, 8GB RAM, 67 Fast Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X