ஒரு பக்கம் விலை ஏற்றம்., ஒரு பக்கம் தள்ளுபடி- போக்கோ ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் அதிரடி!

|

சமீபத்தில் போக்கோ ஸ்மார்ட்போன் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. சியோமியின் துணை பிராண்டாக போக்கோ சந்தையில் அடியெடுத்து வைத்தது. பின் காலப்போக்கில் போக்கோ நிறுவனம் சியோமியில் இருந்து பிரிந்து ஒரு சுயாதீன பிராண்டாக உருவெடுத்தது. போக்கோ ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் ப்ரீமியம் அம்சங்களோடு சாதனங்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

போக்கோ ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

போக்கோ ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

உலகளவில் இரண்டாவது பெரியளவு மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் தங்களை நிலைநிறுத்த போராடி வருகிறது. அதேபோல்தான் போக்கோ நிறுவனமும், இந்தியா போன்ற சந்தைகளின் நிறுவனத்தின் வளர்ச்சியே இந்த மகத்தான வெற்றிக்கு காரணியாக இருக்கிறது. போக்கோ நிறுவனத்தின் ஜென் போன்களான போக்கோ எம்3, போக்கோ சி3, போக்கோ எக்ஸ் 3 போன்ற பலவகை சாதனங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனையானது செப்டம்பர் 2021-ல் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனையில் போக்கோ போன்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

போக்கோ ஸ்மார்ட்போனுக்கு பெரிய தள்ளுபடி

போக்கோ ஸ்மார்ட்போனுக்கு பெரிய தள்ளுபடி

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை செப்டம்பர் 2021, போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனுக்கு பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,499 முதல் வாங்கலாம். போக்கோ எம் 2 ரீலோடட் மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ உள்ளிட்ட சற்று பழைய மாடலான போக்கோ எம் 2 தொடர் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எம் 2 ரீலோடட் ஸ்மார்ட்போனுக்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ஆனது ரூ.9,999 என்று இருக்கிறது.

தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை செப்டம்பர் 2021-ல் 3 ஜிபி ரேம் உடன் ஆர்க்டிக் ப்ளூ வேரிண்ட்டில் கிடைக்கும் போக்கோ சி3 சாதனத்துக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7,499 ஆக இருக்கிறது. போக்கோ எக்ஸ் 3 மற்றும் போக்கோ எஸ்க் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை செப்டம்பர் 2021

பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை செப்டம்பர் 2021

போக்கோ போன்களுக்கான தள்ளுபடியோடு பிளிப்கார்ட் கார்னிவல் விற்பனை செப்டம்பர் 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் கொண்ட போக்கோ எக்ஸ் 3 பேஸ் சாதனத்துக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் போக்கோ சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

போக்கோ எம் 3

போக்கோ எம் 3

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.11,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.10,499 என்ற விலையில் கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் 12 சதவீத தள்ளுபடி அளிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சி 3

போக்கோ சி 3

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆர்க்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.9,999 என இருந்த இந்த ஸ்மார்ட்போன் விலை தற்போது ரூ.7,499 என வாங்கலாம்.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கிராபைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அதேபோல் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் 20 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.23,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 ஆக இருக்கிறது. உயர்தர அம்சங்கள் கொண்ட போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்க இதுவே சரியான நேரமாகும்.

போக்கோ எம்2 ரீலோடட்

போக்கோ எம்2 ரீலோடட்

சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கிரேயிஷ் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 ஆக இருந்த நிலையில் பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆக இருக்கிறது. ரூ.10,000-த்துக்கு கீழ் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் தாராளமாக வாங்கலாம்.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இது கோபால்ட் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.22,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம் 2 ப்ரோ

போக்கோ எம் 2 ப்ரோ

போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.17,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என்ற விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 16 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco Smartphones Now Available at Great Offers in Flipkart Carnival Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X