போக்கோவின் அடுத்த வெளியீடு இதுவா: போக்கோ சி3 குறித்து வெளியான தகவல்!

|

சியோமியின் துணை பிராண்டான போக்கோ நிறுவனத்தின் அடுத்த வெளியீடு போக்கோ சி3 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சியோமியின் துணை பிராண்டான போக்கோ

சியோமியின் துணை பிராண்டான போக்கோ

சியோமியின் துணை பிராண்டான போக்கோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் போக்கோ எம் 2 ப்ரோவை ரூ.13,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. இந்தநிலையில் போக்கோ சி 3 என்ற புதிய தொடர் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

போக்கோ சி3

போக்கோ சி3

ரெட்மி 9சி யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போக்கோ சி3 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ சி3 ப்ளூடூத் எஸ்ஐஜி இணையதளத்தில் மாடல் எண் M2006C3MI உடன் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் முன்னதாகவே இந்திய தர நிர்ணயத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான தகவல்

வெளியான தகவல்

POCO C3 உடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் தொடரான ரெட்மி 9ஏடி ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் காணப்படுகிறது. ரெட்மி 9ஏடி முன்னதாக ரெட்மி 9ஏ மாடலின் மறுபெயரிடப்பட்டு பதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகவில்லை

அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகவில்லை

போக்கோ சி3 மாடல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இதன் ரெட்மி 9சி மறுபெயரிடப்பட்ட பதிப்பு என்பதால் அதன் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!

ரெட்மி 9சி சிறப்பம்சங்கள்

ரெட்மி 9சி சிறப்பம்சங்கள்

ரெட்மி 9 சி 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1600*720 பிக்சல்கள் தீர்மானம் தெளிவுத்திறன் மற்றும் 20:9 விகித அளவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 இன்டர்னல் சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 512 ஜிபி வரை விரிவாக்க வசதி பெறுகிறது. இதில் 5000எம்ஏஹெச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிஹெட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 செயலி மூலம் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு உடன் இயக்கப்படுகிறது. குறிப்பாக இதில் கைரேகை சென்சார் ஆதரவும் ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்டல் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு கொண்டுள்ளது. ரெட்மி 9சி ஆண்ட்ராய்டு 10ஐ எம்ஐயூஐ 11 உடன் இயக்கப்படுகிறது.

13 எம்பி பிரதான கேமரா

13 எம்பி பிரதான கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷோடு 13 எம்பி பிரதான கேமரா அம்சத்தோடு 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. அதேபோல் 5 எம்பி செல்பி கேமராவும் இதில் இருக்கிறது.

file images

Best Mobiles in India

English summary
Poco's Next Release Could be the Poco C3 Smartphone- Leaked Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X