TWS இயர்பட்ஸ் வாங்குனா வெயிட் செஞ்சு இந்த POCO இயர்பட்ஸை தான் வாங்கணும்.!
போக்கோ (Poco) நிறுவனம், இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறி வந்தது. அந்த சாதனம் ஒரு ஸ்மார்ட்போன்னா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. ஆனால், நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பது ஒரு புதிய TWS இயர்பட்ஸ் என்பது உறுதியாகியுள்ளது.
POCO நிறுவனம் சிறிது காலமாக, TWS இயர்பட்களில் வேலை செய்து வருகிறது. ஆனால் அவற்றை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், POCO நிறுவனம் ஒரு இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறி, சில ரெண்டர் புகைப்படங்கள் பிரத்தியேகமாக பகிரப்பட்டன.

இது போக்கோவின் இயர்பட்ஸ் சாதனத்தின் முழுமையான வடிவமைப்பைக் காட்டியது. இப்போது, மற்றொரு பிரத்தியேகமான புதிய தகவல் இது என்ன சாதனம்? இது எப்படி இருக்கும்? இது என்ன பெயருடன் வெளிவரும்? இதன் விலை என்ன? இதன் அறிமுகம் எப்போது என்ற தகவல்களை தற்போது லீக் செய்துள்ளன.
நமக்கு தெரிந்த தகவலின் படி, போக்கோ நிறுவனம் இந்த சாதனத்தை போக்கோ பாட்ஸ் (POCO Pods) என்ற பெயருடன் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய POCO Pods இயர்பட்ஸ் சாதனம் இந்தியாவில் ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆகையால், இன்னும் சில தினங்களில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீசரை நிறுவனம் வெளியிடலாம்.
POCO இந்தியாவும் நாட்டில் ஒரு புதிய 6 எண் கொண்ட ஃபோன் வருவதை டீஸ் செய்து வருகிறது. ஆனால் இந்த போன் POCO Pods உடன் அறிமுகமாகுமா அல்லது பிற்காலத்தில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவில் POCO Pods TWS இயர்பட்களின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை இருக்கும் என எங்கள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் POCO Pods இன் ரெண்டர்கள், சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான Redmi Buds 4 Active போன்ற வடிவமைப்பைக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய TWS இயர்பட்களின் விவரக்குறிப்புகள் ஒரே மாதிரியாக இருப்பது போல் தெரிகிறது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் (Redmi Buds 4 Active) தற்போது ரூ.1,399 விலைக்கு கிடைக்கிறது.
ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டதால், இந்த புதிய போக்கோ பாட்ஸ் சாதனத்தின் விலையிலும் அதே நிலையை நாம் எதிர்பார்க்கலாம். சமீபத்தில் வெளியான ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் சாதனத்தின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கையில், இது Bluetooth 5.3 உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கூகிள் இன் பாஸ்ட் பேரிங் (Fast Pairing) ஆதரவைக் கொண்டுள்ளது.
Redmi Buds 4 Active ஆனது 12mm பாஸ் ப்ரோ டிரைவர்களை (Bass Pro Drivers) கொண்டுள்ளது. இது ENC (Environmental Noise Cancellation) ஆதரவு மற்றும் ஸ்வெட் அண்ட் ஸ்பிளாஷ் ப்ரூப் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை அடக்கிய IPX4 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ், காதுகளில் சிறந்த பிடிப்புக்காக அல்ட்ரா-லைட்வெயிட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உடன் வருகிறது. Redmi Buds 4 Active ஆனது ஆடியோ அமைப்புகளை மாற்றுவதற்கு ஆப்ஸ் ஆதரவுடன் வருகிறது. இதே அம்சத்துடன் போக்கோவின் புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








