பட்ஜெட் பிரியர்களே இலக்கு: 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ சி40 அறிமுகம்- மலிவு விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்!

|

மிதமான பயன்பாட்டு அனுபவத்துடன் போக்கோ சி40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு நிலை ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களை கருத்தில் கொண்டு இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இந்த சாதனத்தின் அம்சங்களின் மூலம் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சி40 ஸ்மார்ட்போன்

போக்கோ சி40 ஸ்மார்ட்போன்

போக்கோ சி40 ஸ்மார்ட்போனானது 13 எம்பி முன்புற கேமரா, ப்ளூடூத் 5, 4ஜி ஆதரவு மற்றும் டூயல் பேண்ட் வைஃபை இணைப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏன் நுழைவு நிலை வாடிக்கையாளர்களுக்கு என குறிப்பிடப்படுகிறது என்று பார்க்கலாம்.

இந்திய வெளியீடு குறித்த விவரங்கள்

இந்திய வெளியீடு குறித்த விவரங்கள்

போக்கோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போக்கோ சி40 ஸ்மார்ட்போனை உலகளவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே வெளிவரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியீட்டு விவரங்கள் தெளிவாக இன்னும் குறிப்பிடவில்லை. போக்கோ சி40 ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

பிராண்டிங் லோகோ மற்றும் கேமரா தொகுதிகள்

பிராண்டிங் லோகோ மற்றும் கேமரா தொகுதிகள்

போக்கோ எம் சீரிஸ்கள் போன்றே போக்கோ பிராண்டிங் லோகோ மற்றும் கேமரா தொகுதிகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புற பேனலில் இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் செவ்வக வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புற பேனல் கைரேகை எதிர்ப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

போக்கோ சி40 விலை

போக்கோ சி40 விலை

போக்கோ சி40 சாதனத்தின் அதிகாரப்பூர்வ விலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் தன்மையை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆகும். இந்த சாதனத்தை வாடிக்கையாளர்கள் பிளாக், மஞ்சள் மற்றும் பச்சை என மூன்று விருப்பங்களில் பெறலாம். போக்கோ இந்நாள் வரை விற்பனை செய்யும் பட்ஜெட் விலை சாதனம் போக்கோ சி31 ஆகும். இதன் விலை ரூ.7499 ஆக இருக்கிறது.

போக்கோ சி40 சிறப்பம்சங்கள்

போக்கோ சி40 சிறப்பம்சங்கள்

போக்கோ சி40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், போக்கோ சி40 சாதனம் நுழைவு நிலை பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மிதமான வன்பொருட்களை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 6.71 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை சாதனத்தில் பெரிய டிஸ்ப்ளே என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரீடிங் மோட் அம்சம்

ரீடிங் மோட் அம்சம்

சமீபத்திய போக்கோ சாதனங்களில் கிடைக்கும் ரீடிங் மோட் போன்ற டிஸ்ப்ளே அம்சத்தை பயனர்கள் இந்த சாதனத்திலும் அனுபவிக்கலாம். இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் ஐபி52 சான்றிதழை பெற்றிருக்கிறது. பட்ஜெட் விலை சாதனத்தில் இது மிக அரிது. ஐபி52 ஆனது சாதனம் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தடிமனான வடிவமைப்பு மற்றும் அதிக எடை

தடிமனான வடிவமைப்பு மற்றும் அதிக எடை

போக்கோ சி40 சாதனமானது கட்டமைப்பின் அடிப்படையில் தடிமனமாக இருக்கிறது. இதன் எடை 204 கிராம் ஆக இருக்கிறது. இதன் மூலம் இந்த சாதனம் பெரிய அளவிலும் எடை சற்று அதிகமாக இருக்கும் என்பதும் உறுதியாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஆக்டோ கோர் JLQ JR510 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் பெயர் வித்தியாசமாக இருக்கிறதா?. ஆம் இது வழக்கமான சிப்செட் இல்லை.

ஸ்பெஷலான சிப்செட் வசதி

ஸ்பெஷலான சிப்செட் வசதி

ஆக்டோ கோர் JLQ JR510 SoC, மிதமான பயன்பாட்டு தன்மை கொண்ட சிப்செட் என கூறப்படுகிறது. இந்த சிப்செட்டில் இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. வழக்கமாக பயன்படுத்தப்படும் குவால்காம் மற்றும் மீடியாடெக் சிப்செட்டுக்கு பதிலாக JLQ சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. இது ஷாங்காய் தயாரிப்பு பொருள் ஆகும்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

போக்கோ சி40 ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் பின்புறத்தில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா இடம்பெற்றிருக்கிறது. இதன் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்சார் விவரங்கள் தெளிவாக தெரியவில்லை இருப்பினும் இது முழு எச்டி வீடியோ பதிவை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ சி40 சாதனத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், இதன் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி. நுழைவு நிலை வாடிக்கையாளர்களுக்கான சாதனம் என்று குறிப்பிட்ட போக்கோ இதில் 6000 எம்ஏஎச் பேட்டரியை பொருத்தி இருக்கிறது. இது நீடித்த ஆயுளை வழங்கும். அதேபோல் 6000 எம்ஏஎச் பேட்டரியை 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த சாதனத்துடன் 10 வாட்ஸ் அடாப்டரை மட்டுமே நிறுவனம் வழங்குகிறது. இதன்மூலம் சார்ஜ் செய்வதற்கு சற்று அதிக நேரம் எடுத்தாலும் பேட்டரி ஆயுள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Poco Officially Launched its Poco C40 GloballY: Smartphone Designed for Entry level users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X