Home
News

போட்டு தாக்கும் கம்மி விலை.. 15 நிமிடங்களில் எல்லா யூனிட்டும் காலி.. Poco M6 Pro 5G அதிரடி சேல்ஸ்..

போக்கோ (POCO) நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட்போன் மாடலான போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) சாதனத்தின் விற்பனை நேற்று துவங்கியது. விற்பனை துவங்கிய 15-நிமிடங்களில் இந்த போனின் அணைத்து யூனிட்களும் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்தது.

போக்கி (Poco) நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) ஸ்மார்ட்போன் புதன்கிழமை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்தது. இது விற்பனைக்கு வந்த முதல் 15 நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த யூனிட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இது உண்மையில் போக்கோ நிறுவனத்தையே மிரள வைத்துள்ளது.

போட்டு தாக்கும் கம்மி விலை.. 15 நிமிடங்களில் எல்லா யூனிட்டும் காலி..

இதற்கான முக்கிய காரணமே, இந்த புதிய போக்கோ எம்6 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது மலிவு விலையில் ஆற்றல் நிரம்பிய செயல்திறன் மற்றும் புதுமையின் வாக்குறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே கவனிக்கத்தக்கது. ரூ.10,000 விலைக்குள் சிறப்பான அம்சங்களை பேக் செய்த பெஸ்ட் போனாக இது நேற்று விற்பனைக்கு வந்தது.

விற்பனைக்கு வந்த முதல் 15 நிமிடங்களில் நடந்த ஆன்லைன் ஆர்டர்களில் அணைத்து மாடல்களும் விற்று தீர்ந்தன. இந்த வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த போக்கோ இந்தியாவின் நாட்டின் தலைவர் ஹிமான்ஷு டாண்டன், "இன்றைய அமோக விற்பனை எங்கள் தயாரிப்பிற்கு எவ்வளவு வரவேற்புள்ளது என்பது தெளிவாக காண்பிக்கிறது. 15 நிமிடங்களில் Flipkart இல் அணைத்து யூனிட்களும் விற்பனையானது, எங்கள் உறுதிப்பாட்டின் உறுதியான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் நாங்கள் தாழ்மையுடன் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இந்த வெற்றியை தொடர்ந்து, இதே வேளையில் புதுமைகளின் எல்லைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு உற்சாகமாக இருக்கிறோம். இது எங்கள் பயணத்தின் ஆரம்பம், மேலும் ஸ்மார்ட்போன்களின் உலகில் என்ன சாத்தியம் என்பதை மறுவரையறை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறியிருக்கிறார்.

போட்டு தாக்கும் கம்மி விலை.. 15 நிமிடங்களில் எல்லா யூனிட்டும் காலி..

வெறும் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி Poco M6 Pro 5G ஆனது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. அதாவது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB வேரியண்ட் மாடலின் விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.11,999 என்று அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இந்த விலைகள் ஐசிஐசிஐ வங்கி தள்ளுபடி ரூ 1,000 உட்பட என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 9, 2023 முதல் Flipkart-ல் பிரத்தியேகமாக கிடைக்கும். போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் வருகிறது. மேலும் இதன் AnTuTu ஸ்கோர் மதிப்பெனில் 437000-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இது LPDDR4X ரேம் தொழில்நுட்பம் மற்றும் 12ஜிபி ரேம் வரை கொண்ட திறனுடன் வருகிறது.

போட்டு தாக்கும் கம்மி விலை.. 15 நிமிடங்களில் எல்லா யூனிட்டும் காலி..

Poco M6 Pro 5G ஆனது அதன் பிரிவில் 6.79' இன்ச் அளவுள்ள மிகப்பெரிய டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்மார்ட்போனில் 90Hz அடாப்டிவ் சின்க் டிஸ்ப்ளே உள்ளது. சாதனம் SGS லோ ப்ளூ லைட் சான்றிதழைக் கொண்டுள்ளது. இது மேம்பட்ட கண் ஆரோக்கியம் மற்றும் தூக்கத்தின் தரத்திற்காக குறைக்கப்பட்ட நீல ஒளி உமிழ்வை உறுதி செய்கிறது.

கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP + 2MP கொண்ட டூயல் கேமரா அமைப்பை எல்இடி பிளாஷ் (LED Flash) உடன் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. பேட்டரி பற்றி பேசுகையில், இது 5000mah கொண்ட பாஸ்ட் சார்ஜிங் பேட்டரியை வழங்குகிறது. இது யுஎஸ்பி டைப்-சி போர்டை ஆதரிக்கிறது. ரூ.9999 விலையில் முதல் வாங்க கிடைத்ததால், இந்த சாதனம் முதல் 15 நிமிடங்களில் விற்று தீர்க்கப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M6 Pro 5G Mobile Under Rs 9999 Sold Out In Just 15 Minutes On Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X