பட்ஜெட் விலையில் புது 5ஜி போன்.. கொஞ்சம் வெயிட் பண்ணி 'இந்த' போனை வாங்குங்க..
போக்கோ (POCO) நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக போக்கோ M6 ப்ரோ 5G போனை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது
இந்த ஸ்மார்ட்போனி சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் Poco M6 Pro 5G வெளியீட்டை நிறுவனம் டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய டீசர் வரவிருக்கும் பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. POCO M6 Pro 5G ஐ பிளாட் பிரேம் வடிவமைப்புடன் வரும்.

Poco M6 Pro 5G இன் பின்புற பேனல் மற்றும் அதன் பாடி தட்டையான வடிவமைப்பை பெறுவதாக டீசர் தகவல் காண்பிக்கிறது. இந்த டீஸர் படம் ஃபோனின் பின்புற பேனல் வடிவமைப்பை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. இது டூயல்-டோன் ஃபினிஷைக் காட்டுகிறது. POCO M6 Pro 5G ஆனது இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனாக இருக்கும்.
இந்த புத்தி போன் விலை ரூ.15,000 க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி டூயல் டோன் பேக் கொண்டுள்ளது. பின்புற பேனலின் மேல் பகுதியில் டூயல்-கேமரா அமைப்பிற்கான செவ்வக வடிவ பிளாக்-அவுட் பகுதி மற்றும் LED ஃபிளாஷ்ஷை கொண்டுள்ளது. மேல் வலது மூலையில் POCO லோகோ உள்ளது.
இந்த சாதனம் இந்தியாவில் சியான் ப்ளூ (Cyan blue), கிரீன் கலர் (Green) ஆப்ஷனில் போனை பார்க்கலாம். ஸ்மார்ட்போனில் இடது விளிம்பில் உள்ள சிம் ஸ்லாட் இருப்பதும் தெரிகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, வரவிருக்கும் POCO M சீரிஸ் ஸ்மார்ட்போன் 5G ஆதரவை வழங்கும். POCO விரைவில் மேலும் விவரங்களை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து Redmi Note 12R இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இந்த POCO M6 Pro 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்திய லீக் தகவல் கூறுகிறது. அப்படியானால், போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட் உடன் வருகிறது. இதன் பேட்டரி வழக்கம் போல பெரிய சைசில் வருகிறது.
Redmi Note 12R 5G ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட் உடன் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த போன் சீனாவில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் இயங்குகிறது.
இந்த சாதனம் முழு HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 6.79' இன்ச் IPS LCD பேனல் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே முன் கேமராவிற்கான மேல் மையத்தில் துளை-பஞ்ச் கட்அவுட் உடன் வருகிறது. இது 550 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) உடன் வருகிறது.
ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், 8ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இது MIUI 14 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலானது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இதன் பின்புற கேமரா 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் வருகிறது.
முன்பக்கத்தில் இது 5MP கேமராவை கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. இது ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP53 மதிப்பீட்டை கொண்டுள்ளது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், IR பிளாஸ்டர், இரட்டை சிம், 5G, WiFi 6, புளூடூத் 5.1, போன்றவற்றை இது கொண்டுள்ளது..


Click it and Unblock the Notifications








