Airtel கடைகளில் மக்கள் கூட்டம்.. கம்மி விலையில் 5G போன்.. 50GB இலவச டேட்டா.. அம்பானியை மிஞ்சிய Airtel சலுகை..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது வெறும் ரூ.8,799 விலையில் ஒரு 5ஜி போனை வழங்குவது மட்டுமில்லாமல், இலவசமாக 50GB டேட்டாவையும், கூடுதல் இலவச நன்மைகளையும் வழங்கி அசத்தியுள்ளது. இந்த போனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஏர்டெல் கடைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
பாரதி ஏர்டெல் (Bharti Airtel): நிறுவனம் தற்போது போகோ (POCO) பிராண்டுடன் இணைந்து ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் மூலம் புதிய போகோ M6 5ஜி (Poco M6 5G) சாதனத்தை சிறப்பு நன்மையுடன் வாங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இப்போது ஒரு அட்டகாசமான காம்போ (Combo) நன்மையை அதன் ப்ரீபெய்ட் (Airtel Prepaid) பயனர்களுக்கு வழங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை கிடைக்கும் ஒரு புதிய சலுகை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா (50GB Data) வரை இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
POCO M6 5G: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, பட்ஜெட் செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான போகோ M6 5ஜி (POCO M6 5G) உடன் தான், இந்த காம்போ நன்மை இப்போது கிடைக்கிறது. இதன் ஏர்டெல் நிறுவனம் அதன் எக்ஸ்குளூசிவ் போகோ M6 5ஜி என்ற ஆஃபரின் (Airtel Exclusive Offer For POCO M6 5G) கீழ் வழங்குகிறது.
இதற்கு முன்பும் ஏர்டெல் நிறுவனம் போகோவுடன் அதன் 4ஜி மொபைல் (4G Mobile) சாதனத்திற்காக கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை நிறுவனம் போகோவின் 5ஜி மொபைல் (5G Mobile) சாதனத்திற்காக மீண்டும் ஒருமுறை கைகோர்த்துள்ளது. போகோ நிறுவனம் அதன் புதிய போகோ M6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போன் மாடலை டிசம்பர் 26ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது.

போகோ M6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்தியாவில் 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் விருப்பத்துடன் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் விருப்பத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. POCO M6 5G சாதனம் கேலக்டிக் பிளாக் (Galactic Black) மற்றும் ஓரியன் ப்ளூ (Orion Blue) நிறங்களில் வாங்க கிடைக்கிறது.
அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக, POCO M6 5G ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது வெறும் ரூ.8,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனை வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு இப்போது கூடுதலாக 50GB இலவச டேட்டாவும் கிடைக்கிறது என்பது சிறப்பான விஷயமாகும். இந்த ஏர்டெல் சிறப்பு சலுகை மே 31, 2024 வரை கிடைக்கும்.
போகோ M6 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு, ஏர்டெல் பயனர்கள் அவர்களுடைய ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டை (Airtel Prepaid SIM Card) போனில் இன்சர்ட் செய்து பயன்படுத்த துவங்கலாம். ஏர்டெல் வழங்கும் 50GB இலவச டேட்டாவை பெற பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் (Airtel Thanks Apps) மூலம் லாகின் செய்து, ரிவார்ட் விருப்பத்தின் (Reward) கீழ் இருந்து இந்த இலவச டேட்டா நன்மையை பெறலாம்.
ஏர்டெல் நெட்வொர்க் பயனர்கள் தலா 10ஜிபி அளவிலான 5 மாதாந்திர கூப்பன்களைப் பெறுவார்கள். டேட்டா கூப்பன்களை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரிவார்ட்ஸ் பிரிவின் கீழ் பெறலாம். இந்த கூடுதல் இலவச டேட்டா பலனை அனுபவிக்க, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.199 முதல் செயல்படும் அடிப்படைத் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.


Click it and Unblock the Notifications








