பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

|

Poco நிறுவனம் உருவான கதை உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம். முதலில் இது Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டாக (கடந்த 2018 ஆம் ஆண்டில்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிராண்டின் கீழ் வெளியான முதல் ஸ்மார்ட்போன் Pocophone F1 ஆகும்.

பின்னர் போக்கோ நிறுவனம் கடந்த ஜனவரி 2020 இல் - நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே - போக்கோ இந்தியா என்கிற ஒரு சுயாதீன பிராண்டாக மாறியது.

ஆனால் என்ன புண்ணியம்?

ஆனால் என்ன புண்ணியம்?

என்னதான் Independent brand ஆக இருந்தாலும் கூட, இன்னமும் போக்கோ பிராண்ட் ஆனது ரெட்மி போன்களின் ரீபிராண்டட் (Rebranded) மாடல்களையே அறிமுகம் செய்து வருகிறது.

ஆனாலும் சும்மா சொல்ல கூடாது; போக்கோவிற்கென இந்தியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ஏனெனில் போக்கோ நிறுவனம், அறிமுகமாகும் எல்லா ரெட்மி மாடல்களையுமே ரீபிராண்டிங் செய்வதில்லை; சில "வெயிட்டான" மாடல்களை மட்டுமே தேர்வு செய்து, தன் பெயரின் கீழ் களமிறக்குகிறது!

பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

அப்படியாக

அப்படியாக "மாறுவேஷத்தில்" இந்தியாவிற்கு வரும் அடுத்த ரெட்மி போன்!

இதை ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் என்று போக்கோ நிறுவனமோ அல்லது சியோமி நிறுவனமோ "விளம்பரம்" செய்யாது என்றாலும் கூட.. உண்மை என்னவோ - அதுதான்.

இது முற்றிலும் புதியதொரு Poco M5 சீரிஸ் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமாகும். இது எந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்பதை பற்றி பார்க்கும் முன் போக்கோ எம்5 எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை பற்றி பார்த்துவிடலாம்.

நினைப்பதை விட விரைவில் வெளியாகும்!

நினைப்பதை விட விரைவில் வெளியாகும்!

கிடைக்கப்பெற்ற தகவலின் வழியாக, போக்கோ எம்5 சீரீஸ் ஸ்மார்ட்போன் ஒன்று பல சான்றிதழ் இணையதளங்களில் காணப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஐஎம்இஐ, யுஎஸ் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்சிசி) மற்றும் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் (பிஐஎஸ்) டேட்டாபேஸில் காணப்பட்டுள்ளது.

அறியாதோர்களுக்கு, ஒரு ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தளத்தை "கடந்து விட்டால்" அது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

'டிவிஸ்ட்' என்னவென்றால் 1 போக்கோ போன் அல்ல.. 2 வருகிறது!

'டிவிஸ்ட்' என்னவென்றால் 1 போக்கோ போன் அல்ல.. 2 வருகிறது!

கிடைக்கப்பெற்ற IMEI லிஸ்டிங் வழியாகவே, பல சான்றிதழ் இணையதளங்களில் காணப்பட்ட மாடல் Poco M5 ஆக இருக்கலாம் என்கிற விவரம் நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் போக்கோ எம்5 சீரீஸின் கீழ் குறைந்தது இரண்டு ஸ்மார்ட்போன்களாவது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆக இன்னொரு மாடல் Poco M5s என்று அழைக்கப்படலாம் மற்றும் இதுதான் (நாம் முன்னரே பார்த்தபடி) மாறுவேஷத்தில் இந்தியாவிற்கு வரும் அடுத்த ரெட்மி போன் ஆக இருக்கும்.

"அந்த" ரெட்மி மாடல் - Redmi Note 10S ஆகும்!

கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, Poco M5s ஆனது இந்தியாவில் ஏற்கனவே வாங்க கிடைக்கும் ரெட்மி 10எஸ் ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.

மற்றும் இது மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் - 4ஜிபி ரேம் + 64ஜிபி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி - அறிமுகம் செய்யப்படலாம்.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

Poco M5s என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Poco M5s என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

போக்கோ M5s ஆனது ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில், இது 6.43-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, மாலி-ஜி76 எம்சி4 GPU உடனான ஆக்டா-கோர் MediaTek Helio G95 சிப்செட், 6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 இன்பில்ட் ஸ்டோரேஜ், 64 எம்பி குவாட் கேமரா செட்டப், 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்கும்.

போக்கோ எம்5 எஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?

போக்கோ எம்5 எஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?

இந்தியாவில் Redmi Note 10S ஆனது ரூ.14,999 முதல் என்கிற விலைக்கு வாங்க கிடைப்பதால், அதே மாதிரியான விலை நிர்ணயத்தை நாம் போக்கோ எம்5எஸ் மாடலின் மீதும் எதிர்பார்க்கலாம்.

எப்படி பார்த்தாலும் இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அல்லது அதை சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

போக்கோ M5 மாடலும் ரீபிராண்டட் வெர்ஷனாகத்தான் வருமா?

போக்கோ M5 மாடலும் ரீபிராண்டட் வெர்ஷனாகத்தான் வருமா?

அதுகுறித்து சரியான தகவல்கள் எங்களிடம் இல்லை. ஆனால் POCO M5 ஒரு 4G போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது NFC-க்கான ஆதரவுடனும் வரலாம்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எம்5 ஆனது ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான MIUI 13, மீடியாடெக் 4G ப்ராசஸர், 6GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா, யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரி போன்றவைகளை கூறலாம்.

Photo Courtesy: POCO, Xiaomi

Best Mobiles in India

English summary
Poco M5 Series Two Smartphones to Launch in India Soon One Could Rebranded version of Redmi Note 10S

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X