Home
News

ரூ.14,999 மட்டுமே- 5ஜி ஆதரவு, 50எம்பி கேமரா, 8ஜிபி ரேம்- இந்தியாவில் அறிமுகமான போக்கோ எம்4 ப்ரோ 5ஜி!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு நாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தின் வாரிசாக இது இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்ஷன் 810 எஸ்ஓசி சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதியோடு இந்த சாதனம் வருகிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ஆனது ரூ.16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கூல் ப்ளூ, போக்கோ மஞ்சள் மற்றும் பவர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் பிப்ரவரி 22 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் எனவும் இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: அம்சங்கள்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: அம்சங்கள்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சம் குறித்து பார்க்கையில், இது இந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களைவிட சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சன் 810 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் டைனமிக் ரேம் விரிவாக்க அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மைக்ரோ எஸ்டி கார்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தில் ஒரு சிறிய குறைபாடு இருக்கிறது. அது இரட்டை சிம் பயன்படுத்துபவர்களால் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் பயன்படுத்த முடியாது, இந்த ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் நாள் முழுவதும் பயன்படுத்தப்படலாம் மற்றும் விரைவாக சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இந்த சாதனத்தில் 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Poco M4 Pro 5G Smartphone launched in India With 50Mp Camera, 5000 mAh Battery, Mediatek Dimensity 810 SOC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X