Home
News

ரூ.10,999-க்கு போக்கோ எம்4 5ஜி- 50எம்பி கேமரா, 6ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம்: டர்போ ரேம்!

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

போக்கோ எம்4 5ஜி சாதனம்

போக்கோ எம்4 5ஜி சாதனம்

போக்கோ எம்4 5ஜி சாதனம் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 29) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி 7 பேண்ட்கள் உள்ளடக்கத்தோடு இருக்கும் என போக்கோ குறிப்பிடுகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் டர்போ ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் "ஹிப்னாடிக் ஸ்வர்ஸ் டிசைன்" உடன் வருகிறது. இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி52 மதிப்பீட்டுன் வருகிறது.

போக்கோ எம்4 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எம்4 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

போக்கோ எம்4 5ஜி இந்தியாவில் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அடிப்படை மாறுபாடாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அடுத்ததாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,999 எனவும் இருக்கிறது. எஸ்பிஐ கார்ட் பயனர்களுக்கு ரூ.2000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டை ரூ.10,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டை ரூ.12,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் மே 5ஆம் தேதி மதியம் 12 மணி மூலம் இந்த சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களானது கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

போக்கோ எம்4 5ஜி சிறப்பம்சங்கள்

போக்கோ எம்4 5ஜி சிறப்பம்சங்கள்

போக்கோ எம்4 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 13 ஸ்கின் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 அம்சத்தைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி வரை ரேம் வசதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது டர்போ ரேம் அம்சத்துடன் வருகிறது.

50 எம்பி முதன்மை சென்சார்

50 எம்பி முதன்மை சென்சார்

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது அபெச்சர் லென்ஸ் உடன் கூடிய 50 எம்பி முதன்மை சென்சார் உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை உள்சேமிப்பு ஆதரவு இருந்தாலும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 5ஜி இணைப்புக்கு என ஏழு 5ஜி பேண்ட்கள் உடன் வருகிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இதில் தூசி மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கு என ஐபி52 ஆதரவு இருக்கிறது. போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 200 கிராம் ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M4 5G Smartphone Launched in India With 50MP Primary Camera, 6GB RAM, 5000mAh Battery: Starting From Rs.12,999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X