Home
News

Poco M4 5G செம சூப்பரா இருக்கே! உடனே வாங்கலாம் போலயே.. அறிமுக சலுகை விலை இவ்வளவு கம்மியா?

புதிதாக ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ, முதலில் இந்த புதிய ஸ்மார்ட் போன் மாடலை பார்த்துவிட்டு, உங்கள் முடிவை உறுதிப்படுத்துங்கள். ஸ்மார்ட் போன் ரசிகர்களுக்காக இப்போது Poco நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய பட்ஜெட் விலை மாடல் தான் இந்த Poco M4 5G ஸ்மார்ட் போன் மாடல். பட்ஜெட் விலையில், பெஸ்டான அம்சங்களுடன் ஒரு சிறந்த ஸ்மார்ட் போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இந்த பதிவை படித்துவிட்டு உங்களுக்கான மாடலை தேர்வு செய்வது சிறந்தது. ஏனெனில், இந்த Poco M4 5G அப்படி சிறப்புமிக்கது.

Poco M4 5G இன்று முதல் கலக்கலான விற்பனை துவக்கம்

Poco M4 5G இன்று முதல் கலக்கலான விற்பனை துவக்கம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போது Poco M4 5G ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு இன்று முதல் கிடைக்கிறது. இந்த சாதனம் இன்று மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது இரண்டு மெமரி வகைகளில் 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஒரு மாறுபாடாகவும், 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் மற்றொரு சிறப்பு மாறுபாடாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல், நீங்கள் எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தும் பயனர் என்றால், இன்னும் கூடுதலாகச் சலுகை கிடைக்கிறது.

Poco M4 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

Poco M4 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

சரி இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். இதில் என்ன சிறப்பான அம்சங்கள் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். Poco M4 5G ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது ரூ. 12,999 விலையில் கிடைக்கிறது. இதன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது வெறும் ரூ. 14,999 விலைக்குக் கிடைக்கிறது. SBI வங்கி பயனர்களுக்கு இந்த மாடல்களுடன் ரூ. 2,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. இதனால், அடிப்படை மற்றும் உயர்ந்த மாடல் வகைகளின் விலை ரூ.10,999 மற்றும் ரூ.12,999 ஆக குறைகிறது. சிறந்த 5ஜி போனை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

Poco M4 5G ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகள்

Poco M4 5G ஸ்மார்ட் போனின் விவரக்குறிப்புகள்

Poco M4 5G ஸ்மார்ட் போன் ஆனது 6.58' இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240Hz தொடு மாதிரி வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது. போக்கோ நிறுவன சாதனத்தின் டிஸ்ப்ளேயில் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதாவது திரையில் உள்ள உள்ளடக்கத்தைப் பொறுத்து டிஸ்ப்ளே 30 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைப் புத்திசாலித்தனமாகச் சரிசெய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

இது பேட்டரியை நீண்ட காலத்திற்கு சேமிக்க உதவும். மேலும், திரைக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு மேலே கொரில்லா கிளாஸ் 3 அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய Poco M4 5G சாதனம் MediaTek Dimensity 700 சிப்செட் உடன் இணைந்து வருகிறது. இந்த சாதனம் 6GB ரேம் வரை மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. கேமரா பற்றி பிஸுகையில், இந்த சாதனத்தின் பின்புறத்தில் 50 எம்பி AI முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.

பேட்டரி மற்றும் வண்ண விபரங்கள்

பேட்டரி மற்றும் வண்ண விபரங்கள்

முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கான 8 எம்பி சென்சார் உள்ளது. புதிய Poco M4 5G சாதனம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நிறுவனம் சார்ஜரை ஸ்மார்ட்போனின் பெட்டிக்குள் இணைக்கும். Poco M4 5G ஆனது வயர்டு இயர்போன் பிரியர்களுக்காக ஒரு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உடன் பக்கத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, சாதனம் இப்போது Flipkart இல் கிடைக்கிறது. இது Poco Yellow, Power Black மற்றும் Cool Blue ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Poco M4 5G Is Now Available In India Sale Starts From Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X