பட்ஜெட் விலையில் POCO M3 இன்று முதல் விற்பனை.. கையில் வெறும் ரூ.10,000 இருந்தால் போதும்..

|

POCO M3 ஸ்மார்ட்போன் இந்த மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மதியம் 12 மணி முதல் துவங்குகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் விலை, சலுகை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

போகோ எம் 3 ஸ்மார்ட்போன் விலை

போகோ எம் 3 ஸ்மார்ட்போன் விலை

போகோ எம் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.10,999 ஆக தொடங்குகிறது. அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் போகோ எல்லோவ் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

போக்கோ M3 ஆரம்பக்கால சலுகை

போக்கோ M3 ஆரம்பக்கால சலுகை

போக்கோ M3 போனின் முதல் விற்பனை என்பதனால் ஆரம்பக்கால சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி அட்டை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் வழியாக போகோ எம் 3 வாங்கும்போது ரூ .1,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். ஈஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலமாகப் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!

போக்கோ எம் 3 சிறப்பம்சம்

போக்கோ எம் 3 சிறப்பம்சம்

 • 6.53' இன்ச் எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளே
 • வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
 • அட்ரினோ 610 ஜி.பீயுடன் 6ஜிபி ரேம்
 • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
 • MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
 • ட்ரிபிள் கேமரா மைப்பு

  ட்ரிபிள் கேமரா மைப்பு

  • 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார்
  • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
  • 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ்
  • 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர்
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 6,000 எம்ஏஎச் பேட்டரி
  • நிறம் : கூல் ப்ளூ (Cool Blue) , போக்கோ எல்லோ (Poco Yellow) மற்றும் பவர் பிளாக் (Power Black)

Best Mobiles in India

English summary
Poco M3 Starts Its First Sale Today Via Flipkart Know The Price And Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X