வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டீசர்: போக்கோ எம்3 அம்சங்கள் இதோ!
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் குறித்த பல வதந்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்
போக்கோ வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் போக்கோ எம் 3 ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 24) ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த டீசர் வெளியாகியுள்ளது.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் இடம்பெறும் அம்சங்கள் குறித்து பல கசிவுகள் வெளியாகின. தற்போது வெளியாகியுள்ள டீசர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போக்கோ எம் 3 டீசர் மூலம் வெளியாகியுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எம் 3 டீசர் வெளியீடு
போக்கோ எம் 3 டீசர் குறித்து பார்க்கையில் டிஸ்ப்ளே, செயலி மற்றும் பேட்டரி குறித்த முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சேமிப்பு வசதி தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

போக்கோ எம் 3 வடிவமைப்பு விவரங்கள்
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் புதிய டீசர் மூலம் தெரியவந்துள்ளது. போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளேவில் செல்பி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாட்ச் இருக்கிறது. பின்புற வடிவமைப்பானது பிற போக்கோ ஸ்மார்ட்போன் போன்றே உள்ளது.

48 எம்பி முதன்மை கேமரா
போக்கோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டீசரில் சாதனத்தின் பின்புற கேமரா வடிவமைப்பை காட்டுகிறது. பின்புற கேமரா வடிவமைப்பானது சதுர வடிவில் இருக்கிறது. 48 எம்பி முதன்மை கேமரா உட்பட மூன்று கேமராக்கள் இதில் இருக்கும் என தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
6000 எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் இருக்கிறது. செல்பி கேமரா குறித்த விவரங்கள் தெரியவில்லை. போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரியும் 18 வாட்ஸ் வேக சார்ஜிங் அம்சமும் இருக்கும் என தெரிகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கருப்பு, மஞ்சள் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ரூ.20,000-த்துக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் இந்திய வெளியீடு குறித்து தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications