அட்டகாசமான புதிய Poco M3 ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சம் மற்றும் விற்பனை தேதி விபரம்..
போக்கோ (Poco) நிறுவனம் ஒரு வழியாக இந்திய சந்தையில் அதன் புதிய Poco M3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் மாடல் இரண்டு முக்கிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த ஸ்மார்ட்போனை போக்கோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பதே உண்மை. இப்போது ஒரு வழியாக இந்தியாவில் களமிறங்கிவிட்டது.

Poco M3 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம்
புதிய Poco M3 ஸ்மார்ட்போனின் புதிய வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது, அதேபோல் இதன் டிசைன் மற்றும் கலர் இம்முறையும் அட்டகாசமாக அமைத்துள்ளது. முக்கிய சிறப்பம்சமாக இதன் டிசைன் மற்றும் சவுண்ட் அம்சம் கூறப்படுகிறது. இந்த சாதனம் லெதர் போன்ற வெளித்தோற்றத்துடன் க்ரிப்பான உடலை கொண்டுள்ளது. அதேபோல், இதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்ற ஸ்மார்ட்போன்கள் போல் இல்லாமல் ஒரு படி மேல் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Poco M3 ஸ்மார்ட்போன் விலை
புதிய Poco M3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் மாடலாகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடலாகவும் UFS 2.2 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Poco M3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 10,999 விலை என்றும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 11,999 விலை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Poco M3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பிப்ரவரி 9ம் தேதி மதியம் 12 மணிக்குத் துவங்குகிறது.

போக்கோ எம் 3 சிறப்பம்சம்
- 6.53' இன்ச் எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளே
- வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- அட்ரினோ 610 ஜி.பீயுடன் 6ஜிபி ரேம்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார்
- 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
- 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம் : கூல் ப்ளூ (Cool Blue) , போக்கோ எல்லோ (Poco Yellow) மற்றும் பவர் பிளாக் (Power Black)



Click it and Unblock the Notifications