விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ லேப்டாப்.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய தகவல் இந்தியாவின் பிஐஎஸ் சான்று அளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ லேப்டாப்.!

குறிப்பாக போக்கோ நிறுவனத்தின் புது லேப்டாக் மாடல்களின் பேட்டரி முறையே R15B02W மற்றும் R14B02W எனும் மாடல் நம்பர்களுடன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கின்றன. இவை போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கின்றன.

அதேபோல் எம்ஐ லேப்டாப்களின் ரி-பிராண்ட் செய்யப்பட்டு போக்கோ லேப்டாப் மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் லேப்டாப் அறிமுகம் செய்தவுடன் உண்மை தெரிந்துவிடும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ லேப்டாப்.!

மேலும் போக்கோ பிராண்ட் இதுவரை ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வகையில் வரும் 2021-ம் ஆண்டில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது டிவி, ஹெட்போன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும்

அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக போக்கோ லேப்டாப் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது. இதனுடன் போக்கோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

போக்கோ பிராண்ட் அறிமுகம் செய்யும் லேப்டாப் மாடல்கள் 14-இன்ச் மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே வசதிகளுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த லேப்டாப் மாடல்கள் வெளிவரும்

என்று கூறப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ லேப்டாப்.!

இந்த ஆண்டு சியோமி நிறுவனம் தனது மி நோட்புக் மற்றும் மி நோட்புக் ஹாரிசான் எடிஷன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு சாதனங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் போக்கோ அறிமுகம் செய்யும் லேப்டாப் மாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போக்கோ எம் 3 என நம்பப்படும் ஒரு ஸ்மார்ட்போன் ஆனது கூகுள் பிளே ஆதரவு சாதனங்கள் பக்கத்தில் M2010J19CI என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco Laptop May Launching Soon in India: Here the Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X