POCO X2 பயனர்களுக்கு ஏற்பட்ட கேமரா சிக்கலுக்கான தீர்வு கிடைத்தது.. இதை உடனே செய்யுங்கள்..

|

இந்தியாவில் உள்ள POCO X2 பயனர்களிடமிருந்து 'கேமரா வேலை செய்யவில்லை' என்ற ஏராளமான பயனர்கள் புகார்களித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, POCO நிறுவனம் இந்த பிரச்சினை உண்மையானது தான் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், இது இந்தியாவில் உள்ள மொத்த POCO X2 பயனர்களில் வெறும் 0.2% க்கும் குறைவான பயனர்களின் போனை மட்டுமே பாதித்துள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

கேமரா பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தீர்வு

கேமரா பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தீர்வு

பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, நிறுவனம் குறிப்பிட்டுள்ள மென்பொருள் தீர்வு நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது, மேலும் இது பெரும்பாலான சாதனங்களுக்கான சிக்கலை சரிசெய்திடும் என்றும் போக்கோ நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைலில் கேமரா இயங்கவில்லை என குற்றஞ்சாட்டிய பின்னர் நிறுவனம் தற்பொழுது இந்த தீர்வை வெளியிட்டுள்ளது.

இதை உடனே செய்யுங்கள்

கேமரா இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்குத் தீர்வாகப் போக்கோ சாப்ட்வேர் விதிமுறைகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரி செய்யப் பயனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் settings கிளிக் செய்து, அதில் உள்ள சர்ச் பாரில் Manage apps என டைப் செய்து சர்ச் செய்யுங்கள்.

ரூ. 2349 விலையில் நம்பி வாங்குற மாதிரி ஒரு சூப்பர் 4ஜி போன்.. itel Magic 2 4G வாங்க நீங்க ரெடியா?ரூ. 2349 விலையில் நம்பி வாங்குற மாதிரி ஒரு சூப்பர் 4ஜி போன்.. itel Magic 2 4G வாங்க நீங்க ரெடியா?

ரீஸ்டார்ட் செய்து கேமரா ஓபன் செய்யுங்கள்

ரீஸ்டார்ட் செய்து கேமரா ஓபன் செய்யுங்கள்

பின்னர், அதில் காண்பிக்கப்படும் Camera ஆப்ஷனை தேர்வு செய்து Clear Data மற்றும் Clear all data என்ற விருப்பத்தை கிளிக் செய்து இறுதியாக OK பட்டனை கிளிக் செய்யுங்கள். இதை செய்யும் பொழுது உங்களின் கேமரா செட்டிங் மாற்றப்பட்டுவிடும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து ஆன் செய்து கொள்ளுங்கள். இப்போது கேமரா ஓபன் செய்து பார்த்தால் உங்களின் சிக்கல் சரிசெய்யப்பட்டிருக்கும்.

சாப்ட்வேர் வழியில் கோளாறு சரியவில்லை என்றால் இதை செய்யுங்கள்

சாப்ட்வேர் வழியில் கோளாறு சரியவில்லை என்றால் இதை செய்யுங்கள்

ஒருவேளை, இந்த சிக்கல் தொடர்ந்தால், நீங்கள் அடுத்தபடியாக வன்பொருள் தீர்வு நெறிமுறையைப் பின்பற்றலாம். இதை செய்வதற்கு நீங்கள் போகோ இந்தியா ஆதரவு அல்லது அருகிலுள்ள சேவை மையத்தை அணுகலாம். கோவிட் -19 வழிகாட்டுதல்களின்படி ஒரு சேவை மையத்தைப் பார்வையிடுவதற்கு முன் நீங்கள் உங்கள் வருகையை முன்கூட்டியே அழைப்பு மூலம் தெரியப்படுத்துவது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
POCO India acknowledges POCO X2 camera not working issue : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X