போக்கோ லேப்டாப்., கேட்கவே நல்லா இருக்குல- வலிமையான அம்சம்., கடுமையான உழைப்பு- விலை அவ்வளவு இல்லை!

|

ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கிறது போக்கோ. நிறுவனம் தற்போது பிற தயாரிப்புகளை வெளியிடுவதற்கான பணியில் ஈடுபடுவதாக போக்கோ அதிகாரி இந்த மாதத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஓரளவிற்கு ஆக்கிரமித்த நிறுவனம் தற்போது லேப்டாப் சந்தைக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது. பிராண்ட் லேப்டாப் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் நிறுவனம் லேப்டாப்களை தொடர்ந்து ஸ்மார்ட்டிவிகளிலும் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. இது ரெட்மியை போன்றே நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ பிராண்டிங்கில் ரெட்மி ஜி சீரிஸ் லேப்டாப்

போக்கோ பிராண்டிங்கில் ரெட்மி ஜி சீரிஸ் லேப்டாப்

பிஐஎஸ் லிஸ்டிங்கில் போக்கோவின் புதிய லேப்டாப் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை முதலில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். அதேபோல் போக்கோ பிராண்டிங்கில் ரெட்மி ஜி சீரிஸ் லேப்டாப் பேட்டரியும் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது போக்கோ தரப்பில் தகவல் எதுவும் இல்லை. ஆனால் ரெட்மி தனது லேப்டாப்பில் பயன்படுத்தும் அதே பேட்டரியை போக்கோ தனது லேப்டாப்பில் பயன்படுத்த இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறிகள் இதுவாகும்.

போக்கோ பிராண்டின் கீழ் லேப்டாப்

போக்கோ பிராண்டின் கீழ் லேப்டாப்

வெளியான லிஸ்டிங்கில் போக்கோ பிராண்டின் கீழ் சியோமி சாதனத்தின் பேட்டரி பயன்படுத்தப்படுவதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. புதிய லிஸ்டிங் சரியாக இருந்தால் போக்கோ லேப்டாப்பை ரீபிராண்ட் செய்த முதல் லேப்டாப் ரெட்மி ஜி 2021 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. பிஐஎஸ் லிங்க்-ல் இருக்கும் தகவலின்படி 55 வாட்ஸ் பேட்டரியை ரெட்மி ஜி2021 கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்கோவின் புதிய லேப்டாப்

போக்கோவின் புதிய லேப்டாப்

போக்கோவின் புதிய லேப்டாப் ரெட்மி லேப்டாப்பின் ரீபிராண்ட் வேரியண்ட் ஆக இருக்கும் எனவும் இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிங் உடன் 16.1 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 16 ஜிபி ரேம் வசதியோடு 512 ஜிபி உள்சேமிப்பு வசதியை இந்த லேப்டாப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப் இண்டெல் கோர் ஐ5 ப்ரோஸசர் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி பிராண்டின் கீழ் வரும் இரண்டு லேப்டாப் மாடல்களும் லிஸ்டிங்கில் காட்டப்பட்டு இருக்கிறது. இதிலும் அதே பேட்டரி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது ரீபிராண்டட் சாதனமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

போக்கோ லேப்டாப் குறித்த கூடுதல் தகவல்கள்

போக்கோ லேப்டாப் குறித்த கூடுதல் தகவல்கள்

வெளியாகும் போக்கோ லேப்டாப் குறித்த கூடுதல் தகவல்களை அறிய சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மெய்நிகர் நிகழ்வில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.19,600)ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலின் விலை EUR 249 (இந்தியமதிப்பில் ரூ.21,300) ஆக உள்ளது.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் மாலி ஜி57 எம்சி2 ஜபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco Going to Launch its Laptop Soon in India: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X