Home
News

வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

போக்கோ (Poco) நிறுவனம் தனது புதிய போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது Geekbench AI தளத்தில் 24122RKC7G என்ற மாடல் நம்பர் உடன் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (Poco F7 Ultra specifications): 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன்) உடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6000mAh பேட்டரி உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றுமட 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

photo credit: poco, gizmochina, mysmartprice

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F7 Ultra key specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X