கம்மி காசுக்கு புது ப்ளாக்பஸ்டர் Mobile.. இதைவிட கம்மி விலைக்கு ஸ்பெஷல் எடிஷன் கிடைக்காது.. மிரட்டும் POCO..
போகோ பிராண்டின் லேட்டஸ்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலான போகோ எஃப்6 டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் (POCO F6 Deadpool Special Edition Smartphone) ஸ்மார்ட்போனின் விற்பனை தற்போது இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான டெட்பூல் மற்றும் வால்வரின் திரைப்படத்தை கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை, இதன் மீது கிடைக்கும் சலுகை மற்றும் இதன் முழு சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்த போக்கோவில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.

போகோ எஃப்6 டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் (POCO F6 Deadpool Special Edition):
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. பிளாட் டிசைன் கொண்டிருப்பதால், கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி இருக்கிறது. இந்த போக்கோ எப்6 போனில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.
பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட்டை இது கொண்டுள்ளது. இது அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கேமராவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி சென்சார்கள் வருகின்றன. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. இது 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த போக்கோ எப்6 டெட்பூல் எடிஷனில் ஓம்னிவிஷன் ஓவி0பி (OmniVision OV20B) சென்சார் கொண்ட 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
போகோ எஃப்6 டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் விலை (POCO F6 Deadpool Special Edition Price):
பக்கா பேக்கப் கொடுக்கும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட்டுக்காக 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. 7.8 மிமீ ஸ்லிம் டிசைனில் 179 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது.
இதன் விலை பற்றி பேசுகையில், POCO F6 டெட்பூல் எடிஷன் (POCO F6 Deadpool Edition) போனின் 12ஜிபி + 256ஜிபி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ. 4000 மதிப்பிலான கூடுதல் தள்ளுபடியும் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








