Home
News

நம்பவே முடியல, பிளிப்கார்ட் அசத்தல் அறிவிப்பு: ரொம்ப கம்மி விலையில் Poco F4

Poco ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் Poco F4 ஸ்மார்ட்போன் தற்போது பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போனில் மட்டும் ஏன் குறிப்பிட்டு கூற வேண்டும், அப்படி என்ன அதில் இருக்கிறது என பார்க்கலாம்.

தள்ளுபடி விலையில் Poco F4

தள்ளுபடி விலையில் Poco F4

Poco F4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி இயக்க ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது. சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் Poco F4 பிரதான ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

போட்டிப் போட்டு தள்ளுபடி அறிவிக்கும் ஆன்லைன் தளங்கள்

போட்டிப் போட்டு தள்ளுபடி அறிவிக்கும் ஆன்லைன் தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பிரதான ஆன்லைன் விற்பனை தளமாக இருப்பது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகும். இரண்டு தளங்களும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இரண்டு தளங்களும் ஒரே நேரத்தில் தள்ளுபடி தினங்களை அறிவித்தால் அது எப்படி இருக்கும்.

அதிரடியான அறிவிப்பில் பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை

அதிரடியான அறிவிப்பில் பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை

ஆம், அமேசான் பிரைம் தின விற்பனை மற்றும் பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை ஒரே தினங்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் தின விற்பனையானது பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் என்றிருக்கும் நிலையில் பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை அனைவருக்குமானதாக இருக்கிறது. இதில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெறும் ரூ.22,999 என வாங்கலாம்

வெறும் ரூ.22,999 என வாங்கலாம்

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனையானது ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை நடக்கிறது. இந்த தள்ளுபடி தினத்தில் கிடைக்கும் பொருட்களில் குறிப்பிடத்தக்க விஷயம் போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போன் தான். Poco F4 தற்போது பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.22,999 க்கு கிடைக்கிறது. இந்த போக்கோ மாடல் ஸ்மார்ட்போனானது சமீபத்தில் அறிமுகமானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

போக்கோ எஃப்4 இந்திய விலை

போக்கோ எஃப்4 இந்திய விலை

போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. Poco F4 ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.27,999 என அறிமுகத்தின் போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பிளிப்கார்ட்டில் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும்

பிளிப்கார்ட்டில் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதும்

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.2,250 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.25,749 என கிடைக்கும். அதேபோல் கூடுதலாக பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கும் போது ரூ.3000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.22,749 என்ற குறைந்த விலையில் வாங்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் எப்படி இருக்க வேண்டும்?

எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் எப்படி இருக்க வேண்டும்?

SBI டெபிட் கார்டு பயனர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலமாகவும் ரூ.3000 பிளாட் தள்ளுபடியை பெறலாம். இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் பரிமாற்ற சலுகையுடன் ரூ.22,999 என வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Poco F4 வாங்கலாமா? விலைக்கேற்ற மதிப்பு இருக்கா?

Poco F4 வாங்கலாமா? விலைக்கேற்ற மதிப்பு இருக்கா?

Poco F4 பல அம்சங்களை குறிப்பிடத்தக்க வகையில் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மேம்பட்ட ஆதரவு கொண்ட Snapdragon 870 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சங்களை விரிவாக பார்க்கலாம். இறுதியாக உங்களுக்கே தெரியும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமா, வேண்டாமா என்று.

மேம்பட்ட சிப்செட் ஆதரவு

மேம்பட்ட சிப்செட் ஆதரவு

Poco F4 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வெளியாகி இருக்கிறது. Dolby Atmos மற்றும் Dolby Vision தொழில்நுட்ப ஆதரவுகளும் இதில் இருக்கிறது.

இந்தியாவில் போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. Poco F4 5G சாதனமானது நெபுலா க்ரீன் மற்றும் நைட் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வாங்கலாம்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவு

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவு

Poco F4 5G ஆனது இரட்டை சிம் (நானோ) உடன் MIUI 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள 6.67 இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்ப்ளே ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதத்தை கொண்டிருக்கிறது. அதேபோல்

இதில் Omnivision இன் OV64B ஆதரவுடன் கூடிய 64 எம்பி கேமரா பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவும் இருக்கிறது. பிற கேமரா சென்சார்கள் குறித்து பார்க்கையில், 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆதரவுகள் இதில் இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 20 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேம்பட்ட ஆதரவு உறுதி

மேம்பட்ட ஆதரவு உறுதி

4500mAh பேட்டரியுடன் கூடிய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் Poco F4 5G விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டபடி இதன் அம்சங்களை பார்க்கும் போது தெரிந்திருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அனைத்தும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Poco F4 Smartphone Now Available at just Rs.22,999 in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X