போட்டிக்கு களமிறங்கிய போக்கோ: இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்படி Poco F4 5G அறிமுகம்!

|

Poco F4 5G ஸ்மார்ட்போன் 120Hz AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 870 SoC உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனமானது Redmi K40S இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். மிட்ரேஞ்ச் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

Poco F4 5G இந்தியாவில் அறிமுகம்

Poco F4 5G இந்தியாவில் அறிமுகம்

படிப்படியாக பல்வேறு விலைப்பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிறுவனங்களில் போக்கோவும் ஒன்று. அதன்படி தற்போது போக்கோ நிறுவனம் Poco F4 5G இந்தியாவில் இன்று (ஜூன் 23) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீமியம் அம்சங்களுடன் மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இதன் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்று தெரியுமா?. வாருங்கள் பார்க்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவு

Poco F4 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வெளியாகி இருக்கிறது. Dolby Atmos மற்றும் Dolby Vision தொழில்நுட்ப ஆதரவுகளும் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது ஸ்மார்ட்போன் சந்தையில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் விலை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

Poco F4 5G விலை விவரங்கள்

Poco F4 5G விலை விவரங்கள்

இந்தியாவில் போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.27,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.29,999 ஆக இருக்கிறது. இந்த சாதனத்தின் ஹை எண்ட் வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.33,999 ஆகும். சலுகையுடன் இந்த சாதனத்தை வாங்கலாம்.

இனி இறந்தவர்களுடன் பேசலாம்: அமேசான் அறிமுகம் செய்யும் அமானுஷ்ய அம்சம்- நீங்க யாருடன் பேசனும்?இனி இறந்தவர்களுடன் பேசலாம்: அமேசான் அறிமுகம் செய்யும் அமானுஷ்ய அம்சம்- நீங்க யாருடன் பேசனும்?

இரண்டு வருட வாரண்டி உறுதி

இரண்டு வருட வாரண்டி உறுதி

Poco F4 5G சாதனமானது நெபுலா க்ரீன் மற்றும் நைட் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இந்த சாதனத்தை ஜுன் 27 முதல் பிளிப்கார்ட் மூலமாக வாங்கலாம். ஆரம்ப சலுகையாக ரூ.1000 தள்ளுபடியும் கூடுதலாக எஸ்பிஐ கார்ட்கள் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.3000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. போக்கோ சாதனத்துக்கு ஒரு வருடம் மட்டுமே உத்தரவாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது Poco F4 5G சாதனத்துக்கு நிறுவனம் இரண்டு வருட வாரண்டியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. விலைக்கேற்ற அம்சங்கள் இந்த சாதனத்தில் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

வேற லெவல் அம்சங்களுடன் Poco F4 5G

வேற லெவல் அம்சங்களுடன் Poco F4 5G

Poco F4 5G ஆனது இரட்டை சிம் (நானோ) உடன் MIUI 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள 6.67 இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்ப்ளே ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதத்தை கொண்டிருக்கிறது.
அதேபோல் அமேசான் பிரைம் வீடியோவில் HDR10+ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இல் டால்பி விஷன் ஆதரவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இருக்கும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. கேமரா அம்சங்கள் எப்படி இருக்கு தெரியுமா?

64 எம்பி கேமரா பிரதான கேமரா

64 எம்பி கேமரா பிரதான கேமரா

Poco F4 5G ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் Omnivision இன் OV64B ஆதரவுடன் கூடிய 64 எம்பி கேமரா பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவும் இருக்கிறது. பிற கேமரா சென்சார்கள் குறித்து பார்க்கையில், 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆதரவுகள் இதில் இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 20 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

மெமரி விரிவாக்க வசதிக்கு இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. அதோடு பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதில் இருக்கிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த சாதனத்தில் உள்ள இணைப்பு ஆதரவுகள் ஆகும்.

4500mAh பேட்டரி வசதி

4500mAh பேட்டரி வசதி

4500mAh பேட்டரியுடன் கூடிய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் Poco F4 5G விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள இரட்டை ஸ்டீரிய ஸ்பீக்கர்கள் ஆனது Dolby Atmos மற்றும் Hi-Res ஆதரவைக் கொண்டுள்ளது. இரைச்சலை நீக்கும் ஆதரவுடன் கூடிய இரட்டை மைக்ரோபோன்கள் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco F4 5G Launched in India with 12GB RAM, 67W Fast Charging, Snapdragon 870 Soc: Midrange Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X