குற்றத்த ஒத்துக்குறோம்யா- போக்கோ எஃப் 3 ஜிடி யூஸ் பண்ணும்போது சூடாகுது: நிறுவனம் சொன்னது என்ன?

|

போக்கோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குறிப்பிட்ட குறைந்த அளவு பயனர்களின் சாதனங்கள் வெப்ப சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை போக்கோ உறுதிப்படுத்தியுள்ளது. போக்கோ எஃப் 3 ஜிடி வெப்பத்தை தடுக்க எட்டு அடுக்கு கிராஃபைட் மூடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எஃப்3 ஜிடி

போக்கோ எஃப்3 ஜிடி

போக்கோ எஃப்3 ஜிடி வெப்பப் பிரச்சனை சந்திப்பது நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை பிற அனைத்து பிரச்சனைகளையும் பாதிக்காது என தெரிவிக்கப்படுகிறது. இது MIUI பதிப்பு 12.5.4.0.RKJINXM-ல் ஏற்படுகிறது.

எதிர்பார்க்கப்பட்ட போக்கோ சாதனங்களில் ஒன்று

எதிர்பார்க்கப்பட்ட போக்கோ சாதனங்களில் ஒன்று

போக்கோ எஃப்3 ஜிடி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ சாதனங்களில் ஒன்றாகும். போக்கோ அதன் உலகளாவிய போக்கோ சமூக மன்றங்களில் பிழை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் போக்கோ எஃப்3 ஜிடி சாதனம் பயன்படுத்தும் குறிப்பி்ட அளவிலான பயனர்கள் மட்டும் இந்த வெப்ப சிக்கலை எதிர் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

வெப்பம் தொடர்பான பிரச்சனை

வெப்பம் தொடர்பான பிரச்சனை

போக்கோ எஃப்3 ஜிடி சாதனத்தில் எதிர்கொள்ளப்படும் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளை குறித்து பயனர்கள் டுவிட்டரில் கவலை தெரிவித்தனர். குறிப்பாக கேம்கள் விளையாடும் போதும், சார்ஜ் செய்யும் போதும் ஸ்மார்ட்போன் சூடாகிறது என பயனர்கள் குறிப்பிட்டனர். விளையாட்டாளர்களுக்கு பிரத்யேக அம்சங்களோடு வெளியான இந்த ஸ்மார்ட்போனில் விளையாடும் போது சூடாவது என்பது பிரச்சனை இருத்தல் கூடாது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பிரச்சனை அனைத்து பயனர்களையும் இது பாதிக்கவில்லை. இதில் பிரத்யேகமாக 1154 சதுர சென்டிமீட்டர் நீராவி சேம்பர் மற்றும் நிலையான வெப்பநிலையை பராமரிக்கக்கூடிய எட்டு அடுக்கு கிராஃபைட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நல்ல வரவேற்பு

இந்தியாவில் நல்ல வரவேற்பு

போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள. இந்நிலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எஃப்3 ஜிடி சாதனத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர்.

அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகார்

அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகார்

அதாவது கேம் விளையாடும் போது இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகாரளித்தனர். மேலும் போக்கோ நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது மற்றும் விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும என்று உறுதியளித்துள்ளது. குறிப்பாக வரவிருக்கும் MIUI அப்டேட் உடன் இந்த புதிய சிக்கல் சரி செய்யப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுளளது.

Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே

Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்டபல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவேஇயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் 4கே வீடியோ பதிவு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எஃப்3 ஜிடி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco F3 GT Facing Heating Issues: Company Acknowledge itself

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X