Home
News

தரைமட்ட விலைக்கு விலை குறைந்த புது POCO போன்! இனி ரூ.6000 மட்டுமே.. அதிரடி சேல்ஸ் ஆரம்பம்!

போக்கோ (Poco) நிறுவனம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் புதிதாக போக்கோ சி51 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது இந்த புதிய Poco C51 சாதனத்தின் மீது அதிரடி ஆஃப்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Poco C51 மீது நிறுவனம், இப்போது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த புதிய போனை வாங்கும் நபர்களுக்கு நம்ப முடியாத சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்புடன் போக்கோ சி 51 சாதனத்தை வாங்கும் போது இந்த தள்ளுபடி கிடைக்கும்.

தரைமட்ட விலைக்கு விலை குறைந்த புது POCO போன்! இனி ரூ.6000 மட்டுமே..

இந்த தள்ளுபடி தற்போது ஃப்ளிப்கார்ட்டில் லைவில் உள்ளது. POCO நிறுவனம் இந்த புதிய தள்ளுபடி விலையை வழங்க ஏர்டெல்லுடன் கைகோர்த்திருப்பதாக தெரிகிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்புடன், இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போன் மாடலை வாங்கும் நபர்களுக்கு நிறுவனத்தின் விலை குறைப்புடன், சில ஏர்டெல் நன்மைகளும் கிடைக்குமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Poco C51 இந்தியாவில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக ரூ.8,499 என்ற விலையில் வாங்க கிடைத்து வந்தது. ஆனால், தற்போது Poco India நிறுவனம், Airtel உடன் இணைந்து Poco C51 ஸ்மார்ட்போன் மீது ரூ. 2,500 அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம், POCO C51 போன் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக விற்பனை செய்யப்படுகிறது.

இது Flipkart இல் இனி குறிப்பிட்ட காலம் வரை மட்டும் ரூ.5,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும். ஜூலை 18 முதல் ரூ. 5,999 விலையில் இந்த போனை மக்கள் வாங்கலாம். இருப்பினும், ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்பில் ஃபோன் சேர்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த போனை ஏர்டெல் நன்மையுடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லிலிருந்து 50 ஜிபி ஒரு முறை மொபைல் டேட்டா நன்மை கிடைக்கிறது.

இது 6.52-இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் உடன் (MediaTek Helio G36 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது பவர் பிளாக் (power black) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3GB பயன்படுத்தப்படாத சேமிப்பகத்தைப் பயன்படுத்தி 7GB வரை கிட்டத்தட்ட ரேம் அளவை விரிவுபடுத்துகிறது.

இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1TB வரை கூடுதல் ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. இது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், குளோனாஸ், பெய்டோ, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் வருகிறது. Poco C51 ஆனது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. அதிக செலவின்றி நச்சென்று ஒரு புது போன் வாங்க வேண்டுமா? அப்படியானால் இதான் ரைட் சாய்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C51 Is Now Available at Rs 5999 Discount Price With an Airtel Prepaid Connection
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X