வெறும் ரூ. 7,199 விலை முதல் புது போகோ போன் வாங்க வாய்ப்பு.. உடனே முந்துங்கள்: எங்கே தெரியுமா?
இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்குவதை தொடர்ந்து, இப்போது இந்தியாவில் எல்லா இடங்களிலும் தள்ளுபடி மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில், ஆன்லைன் விற்பனையைப் பொறுத்தவரை, மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்ட், போகோ தனது சாதனங்களில் வழங்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 விற்பனைக்கு முன்னதாக போகோ தனது தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பற்றி இப்போது வெளிப்படுத்தியுள்ளது.

போகோ எம், எப் மற்றும் சி சீரிஸ் மீது அபாரத் தள்ளுபடி
குறிப்பிடத்தக்க வகையில், போகோ, எஃப், எம் மற்றும் சி தொடரில் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்க போகோ ரசிகர்கள் கிடைத்த சரியான நேரமாக இது அமைந்துள்ளது. போகோ ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடி பற்றி இப்போது பார்க்கலாம். இந்த பண்டிகை காலங்களில், போகோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனைப் உங்கள் கையில் பெற வாய்ப்புள்ளது. ரூ .20,000 விலைக்கு கீழ் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் என்று இது கூறப்படுகிறது.

போகோ எக்ஸ் 3 ப்ரோ போன் மீது எவ்வளவு விலை குறைப்பு கிடைக்கும்?
ரூ. 18,999 விலை கொண்ட இந்த போகோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வங்கி சலுகைகளுடன் வெறும் ரூ. 14,999 விலையில் நீங்கள் ஃபிளிப்கார்ட் விற்பனையின்போது வாங்க முடியும். அதேபோல், போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பற்றி பேசுகையில், இது ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் உடன் வெளிவந்த ஸ்மார்ட்போன் ஆகும். இது ரூ. 13,999 என்ற விலையிலிருந்து இப்போது ரூ. 10,799 என்ற தள்ளுபடி விலையில் விலையில் பிளிப்கார்ட் வழியாக வங்கி சலுகைகளுடன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போகோ எஃப் 3 ஜிடி கேமிங் போனுக்கு கூட தள்ளுபடியா?
போகோ எஃப் 3 ஜிடி, பிராண்டின் மிக மேம்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் மேக்லெவ் ட்ரிக்கர்களைக் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போனாகும். இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டைமென்சிட்டி 1200 சிப்செட் உடன் ரூ. 26,999 விலையில் இப்போது கிடைக்கிறது. சிறப்பு தள்ளுபடியுடன் நடக்கவிருக்கும் சிறப்பு விற்பனையில் இதை வெறும் ரூ .25,499 என்ற விலைக்கு நீங்கள் வாங்கலாம்.

போகோ எம் 3 மற்றும் போகோ எம் 3 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடி விபரம்
பட்டியலில் அடுத்ததாக, ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ. 10,999 மற்றும் ரூ. 14,499 விலையில் போகோ எம் 3 மற்றும் போகோ எம் 3 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. வங்கி சலுகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், எம் தொடரில் உள்ள இந்த போன்கள் மீது முறையே ரூ. 8,549 மற்றும் ரூ. 13,049 என்ற தள்ளுபடியுடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.

ரூ. 7,199 விலையில் எந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கும்?
2.5 மில்லியன் யூனிட் விற்பனையுடன் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான போகோ சி 3 அதன் வழக்கமான விலையான ரூ. 8,499 இலிருந்து இப்போது வெறும் ரூ .6,299 க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போகோ சி 31 செப்டம்பர் 30 ஆம் தேதி ரூ. 7,199 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும். கடைசியாக, போகோ எம் 2 ரீலோட் ரூ .9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இது குவாட் கேமரா அமைப்புடன் இப்போது வெறும் ரூ. 8,099 என்ற விலைக்கு விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications